பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 257

சென்னையில் திரு. இராமநாதன் வீட்டில் நானும் காந்தம்மாவும் உரிமையோடு தங்கினோம்.

இருவருக்கும் நாங்கள் சுண்டைக் காய் அளவு கைம்மாறும் செய்யும் வாய்ப்பு நேரிடவில்லை.

34. மாநகராட்சிக் கல்வி அலுவலரானேன்

சென்னை மாவட்டக் கல்வி அலுவலர்

மதுரையிலிருந்து சென்னைக்கு நெடுஞ்சாலை வழி வந்தடைந்த நான், அடுத்த நாள், சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

அப்போது, சென்னை மாநகரம் முழுவதற்கும் ஒரே ஒரு கல்வி அலுவலரே. -

அவருடைய அலுவலகம் எங்கே இருந்தது? சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரி சாலையில், கூவம் ஆற்றங் கரையில் அமைந்துள்ள, பொதுக்கல்வி இயக்கக வளாகத்தில் இருந்தது. அவ்வளாகம் பரந்தது. அதன் நடுவில் ஒர் சிவப்பு நிற மாடிக் கட்டடம் உள்ளது. அதுவே 1948 ஆம் ஆண்டில் மாவட்டக்கல்வி அலுவலகம்.

அக்கட்டடத்தில் நான் அலுவலில் சேரும்போது, கல்வித்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர்.

‘இது முன்பு, பொதுக்கல்வி இயக்ககம் ஆக இருந்தது. இங்கு பதவிப் பொறுப்பேற்கும் தாங்கள், பொதுக்கல்வி இயக்குநராக உயரவேண்டும்’ என்று வாழ்த்தினார்.

‘நல்லதை விழையும் பெருமனம் என்று அதை ஒரு காதில் வாங்கி, மறுகாதில் விட்டுவிட்டேன்.

நிதி ஆண்டின் இறுதி ஆகையால், அலுவலக வேலை நிறைய இருந்தது.

பள்ளிகள், ஆசிரியர் மையங்கள் முதலியன ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும்படி என்னை அழைத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/273&oldid=623179" இலிருந்து மீள்விக்கப்பட்டது