பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 265

என்னைக் காங்கிரசு ஆதரித்தது

அக் காலகட்டத்தில், சென்னை மாநகர் ஆட்சிக்குத் திறமையான கல்வி அலுவலர் இருந்தால் மட்டும் போதாது; தமிழர் நலன்களைக் காத்துக் கொள்ளக்கூடிய, தமிழர் உணர்வுடைய அதேபோது நினைத் ததை முடிக்கும் தன்மையுடைய திறமையான ஒருவர் தேவை என்று காங்கிரசு கட்சி உறுதியாகக் கருதிற்றாம். *

அக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், அமைச்சர் அவினாசிலிங்கத்தின் காதுகளில் இதைப் போட்டு வைத்தார்கள்.

அவர்,அமைச்சர் பக்தவத்சலத்திடம் ஆலோசனை கேட்டாராம்.

அவரோ எல்லா மாவட்டக் கல்வி அலுவலர்களின் பெயர்களையும் பார்த்துவிட்டு, என்னைப் பரிந்துரைத்தாராம். எனவே, கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் என் பெயரைப் பட்டியலில் சேர்த்து விட்டாராம்.

மாநகராட்சியின் இரகசியக் கூட்டத்தில், என்னைக் காங்கிரசு ஆதரித்தது.

ஒருமித்த முடிவுக்கு வர இயலாமல் வாக்கெடுப்பிற்கு விட்டார்கள். எனக்கு மிகப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவும் நான் மாநகர் ஆட்சிக் கல்வி அலுவலராகத் தேர்ந்து எடுக்கப்பட்டேன்.

இருப்பினும் நான் கட்சி விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகாமல் நடு நிலைமையோடு செயல்பட்டேன்.

பக்தவத்சலனாரின் பரிந்துரை

உதவிப் பஞ்சாயத்து அலுவலர் பணிக்கு என்னைப் பரிந்துரைத்த மீஞ்சூர் பக்தவத்சலனார் முன்னர் என்னைத் தேடி வந்த உடுமலை நகராட்சி தனி அலுவலர் வேலையைத் தட்டி விட்டார்; திருவள்ளுர் பேரூராட்சி அலுவலர் பதவியும் எனக்குப் பொருந்தாது என்று தடுத்தார்.

அவரே, என்னை மாநகராட்சிக் கல்வி அலுவலர் பதவிக்குப் பரிந்துரைத்தார். இது எதைக் காட்டுகிறது?

ஒரு முறை உதவுகிறவர்; மற்றொரு முறை, உதவாமற்போகலாம்; மீண்டும் உதவலாம்; உதவாதபோது வெறுப்போகாழ்ப்போ வளர்த்துக் கொள்வது அறியாமை என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/281&oldid=623188" இலிருந்து மீள்விக்கப்பட்டது