பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. வீடு வாங்கினேன்

ஆணையர் அளித்த பொறுப்பு

நல்ல தமிழ் உணர்வு உடையவன் என்பதற்காக என்னை மாநகராட்சிக் கல்வி அலுவலராக அனுப்பியுள்ளதாக மேயர் டாக்டர் யூ. கிருஷ்ணாராவ், தெலுங்கராகிய ஆணையர் நரசிம்மத்தின் முன்சொல்லிவிட்டாரே; ஆணையர் உள்ளுரப் புகைச்சல் கொள் வாரோ? இப்படிக் கவலைப்பட்டேன்.

அது வீண் கவலை என்பது விரைவில் தெளிவாயிற்று. ஆணையர் என்னை அழைத்தார்; மாநகராட்சியின் நிர்வாக நுட்பங்களை எடுத்துரைத்தார்.

விதிமுறைகளைப் பின் பற்றுவதில் கண்டிப்பாக இருக்கும்படியும் ஆலோசனை கூறினார்.

ஆண்டுதோறும் மாநகராட்சிப் பள்ளிகளுக்காகச் சில நூறு ஆசிரியர்களை நியமிக்கும் நிலை அப்போது இருந்தது.

‘வேலை , நிலையங்களுக்கு எழுதிப் பட்டியல் பெற்று, நேர்முகப் பேட்டி நடத்தி, ஆசிரியர்களைப் பொறுக்குவது இப்போதைய முறை.

அன்று அப்படியல்ல. மாநகராட்சிக்கு நேரே விண்ணப்பங்கள் வரும். அப்படி விண்ணப்பித்தவர்களில் எவரையும் ஆணையர் நியமிக்கலாம்.

ஆணையர், கல்வி அலுவலரைக் கலந்துகொண்டு முடிவு எடுப்பார்.

அம்முறை பின்பற்றப்பட்டது. - நான் கல்வி அலுவலராகச் சேர்ந்ததும் ஆசிரியர்களைப் பொறுக்கும் பொறுப்பை ஆணையர் என்னிடம் விட்டுவிடுவதாகக் கூறினார்.

மாநகராட்சி விதிமுறைப்படி ஆணையர் ஒப்புதல் கையெழுத்தும் தேவைப்பட்டதால் கோப்பைத் தமக்கு அனுப்பும்படி கூறினார்.

அதிகப்படியான பொறுப்புணர்ச்சியோடு, ஆசிரியர்களைத் தேர்ந் தெடுத்தேன்.

நீண்ட காலமாகக் காத்திருப்போருக்கு முன்னுரிமை கொடுத்தேன்; பரிந்துரை இல்லாவிடினும் ஏழைகளை முதலில் கவனித்தேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/282&oldid=623189" இலிருந்து மீள்விக்கப்பட்டது