பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

on. DI சுந்த டிவேலு 301

பின்னர், அரசு ஊழியர்கள் பொறுக்கு ஆணையகத்தின் வாயிலாக, முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று நிர்வாகப் பொறியராக

மருந்து முந்திய நடைமுறையையொட்டி 55 ஆவது வயதில் ஒய்வு பெற்றார்.

சில ஆண்டுகள் கழித்துப் பிறந்திருந்தால் 58 வயது வரையிலும் பணியில் நீடித்திருக்கலாம். அதற்கு மேற்பட்ட பதவிகளும் _ாட்டியிருக்கும்.

தம்பியின் பிள்ளைகள்

நெ.து. நடராசன் தம்பதிகளுக்கு மூன்று மகன்கள்; மூத்த மகன் பவணந்தி; பொறியியல் பட்டம் பெற்றுத் திருச்சி பெல் நிறுவனத் தேர்வு எழுதி வெற்றி பெற்று, அதில் சீனியர் பொறியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

பெற்றோர் ஏற்பாட்டின்படி திரு. பாஸ்கரன் மகள் எழிலரசி பி.எஸ்.ஸி. அவர்களைத் திருமணம் செய்துகொண்டு, விக்ரம் என்னும் சிறுவனுக்குத் தந்தையாக உள்ளார்.

வடக்கே இராமகுண்டம், படின்ட்ா முதலிய இடங்களில் பணியாற்றி விட்டு இப்போது திருச்சியில் இருக்கிறார்.

இரண்டாவது மகன் டாக்டர் பாண்டியன், எம். டி. பட்டம் பெற்ற பின், அரசு மருத்துவத் துறையில் எழும்பூர் பிள்ளைப்பேறு மருத்துவ மனையில் பணி புரிந்து வருகிறார்.

இவர் 15-8-82 அன்று மேஜர் வெங்கடேசன் அவர்கள் மகள் டாக்டர் இராதா எம்.டி. அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.

இவரும் அதே மருத்துவ மனையில் பணி புரிகின்றார். இருவருக்கும் கெளதமன் என்னும் பெயருடைய குழந்தை இருக்கிறது.

மூன்றாவது மகன் சஞ்சீவி, பி.காம். பட்டம் பெற்றபின், ‘உரிமை பெற்ற கணக்கர் (சார்டர்ட் அக்கெளண்டண்ட்) தேர்ச்சி பெற்று, கொல்லத்தில் இந்தியன் வங்கியில் அலுவலராகப் பணிபுரிகிறார்.

3-6-84 அன்று வேலூர், மா.து. நடராசன் அவர்களின் மகள் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து அவுஸ் சர்ஜனாகப் பயிற்சிபெறும் புவனேசுவரியைத் திருமணம் செய்து கொண்டார். மற்றோர் முக்கிய திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/317&oldid=623236" இலிருந்து மீள்விக்கப்பட்டது