பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நினைவு அலைக.

சொல்லச்சொன்னதாக, இந்த நல்ல செய்தியை அவரிடம் கூறு என்று இயக்குநர் கூறினார். -

என்வழி தனிவழி

அடுத்த நிகழ்ச்சிகளைக் காட்டுவதற்கு முன்பு, என் முடிவை

உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இயக்குநர் ஸ்டேதம் வழியைப் பின்பற்றினேனா? துணை

இயக்குநர், லோபோ வழியைப் பின்பற்றினேனா?

கோபுரத்தின் நேர்கீழே நின்று பார்த்தால், அதன் சிறப்புகளையோ, குறைகளையோ சரியாக மதிப்பிட முடியாது. சற்று எட்டி நின்று பார்த்தால், உண்மையை மதிப்பிட இயலும்.

அன்றாட அற்பங்களில் மூழ்கிவிட்டால், சாத்தியக்கூறுகள் தென்படா; எய்தக்கூடிய பெருநிலைகள் தெரியா: சிக்கெனப் பிடித்துக்கொள்ளவேண்டிய, உறுதியான நல்லியல்புகள், ஒழுக்கங்கள் கண்ணில் படா! s

ஊராட்சித் தணிக்கைப் பணியில் இருந்தபோதே, மேற்கூறிய உண்மை ஒரளவு எனக்குப் புலனாயிற்று.

நன்றாகவும் நாணயமாகவும் ரூபாயின் எல்லாக் காசுகளையும் பொதுப்பணிக்குச் செலவிடும்படி பார்த்துக்கொண்டேன்.

சூனாம்பேட்டை அருணாசலம், புலம்பாக்கம் முத்துமல்லா, ஒழலுார் முத்துக்குமாரசாமி, பாலூர் விசுவநாதன், மாத்துார் கிருஷ்ணசாமி, பென்னலூர் இராமலிங்கம் போன்ற நல்லவர்களை ஆதரித்து, அவர்களைக் கொண்டு, அந்த அந்த ஊர்களுக்கு வேண்டியதைச் செய்து வைத்ததால், நான் வெற்றிகரமாகச் செயல்பட முடிந்தது.

‘உனக்கு எழுத்தர் வேலை போதாதா?’ என்று என்னை மட்டம் தட்டப் பார்த்தவர் ஆயிற்றே அருணாசல முதலியார், என்று பழைய எரிச்சலைப் பயிரிட முயன்றிருந்தால், நான் எந்தச் சாதனையையும் பெற்றிருக்க முடியாது. -

‘பிறர் மேல் பழி தீர்த்துக்கொள்ள முயல்வது, அணு அணுவாகத் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும். அத்தகைய முயற்சி, பிறரைத் துன்புறுத்துவதைக் காட்டிலும் தன்னையே சித்திரவதை செய்யும். ‘

இளமையிலேயே ஒரளவு, இப் பாடத்தைக் கற்றிருந்ததால் நான் விெயக்குநர் ஸ்டேதத்தின் நல்வழியை ஏற்றுக்கொள்வது எளிதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/32&oldid=623239" இலிருந்து மீள்விக்கப்பட்டது