பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

06 நினைவு அலைகள்

எவராக இருப்பினும், நேரம் கேட்காமலேயே போய் நின்றாலும் அவருடைய பேட்டி கிடைக்கும்.

அவர், என்னை அலுவலக அறைக்குள் அழைத்தார். நான் சென்றேன்.

‘நானே உங்களுக்குச் சொல்லி அனுப்பவேண்டும் என்று நினைத் தேன்; நீங்களே வந்து நிற்கிறீர்கள்.

‘நேற்றிரவு மாநகராட்சியில் இருக்கும் சத்தியமூர்த்தி என்னிடம் வந்தார். நீங்கள் அழகப்ப செட்டியாருக்கு ஐந்து தமிழ்ப்பாட நூல்கள் எழுத்தித்தர வேண்டுமாம். அதற்குப் பரிந்துரைக்கும்படி என்னை வேண்டிக்கொண்டார். நானும் உங்களிடம் பேசுவதாகச் சொன்னேன். அதற்காகச் சொல்லி அனுப்ப நினைத்தேன்’ என்றார்.

“. . . . . தங்கள் ஆலோசனையைக் கேட்கவே முன்கூட்டியே சொல்லாமல், வந்துவிட்டேன்’ என்றேன்.

‘இது முறைப்படியான காரியமே. முன்கூட்டியே அரசுக்கு எழுதி, ஒப்புதல் பெற்றுக் கொள்ளலாம். திரு. சந்தானகிருஷ்ண நாயுடு அப்படித்தான் செய்யப்போகிறார். அதைப்போல் நீங்களும் செய்வதில் முறைகேடு ஏதும் இல்லை’ என்றார் அமைச்சர்.

‘அய்யா நாயுடு, ஏற்கெனவே பாடநூல் எழுதியவர். நான் இதுவரை எத்தகைய நூலும் எழுதியது இல்லை. அப்படிப்பட்டவனிடம் நூல் எழுதும்படி வலிய வந்து சொல்வதில் எனக்கு ஒர் அய்யம் எழுகிறது.

‘என் நூல்களின் தரத்தைவிட என் பதவி விற்பனைக்குப் பயன்படும். அவர் வெளியிடக்கூடிய பிற நூல்களை விற்றுக்கொள்ளவும் பயன்படும். ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்கு எனக்கு வேண்டியவர் என்று காட்டிக்கொண்டு, பொருள் சேர்க்கலாம் என்று செட்டியார் திட்டமிடு கிறார் எனக் கருதுகிறேன்.

‘அதற்கு உடன்பட்டு என் பதவியை விற்பது சட்டத்திற்கு உட்பட்டும் இருக்கலாம்; உயர்ந்த நடைமுறையாக இருக்குமா? என்றேன்.

‘நீங்கள் புரிந்து கொண்டது சரியே! நீங்கள் எழுத்தாளர் என்பதற்காக உங்களை அழைப்பதாகக் கொள்ளவேண்டாம். பெரிய பதவியில் இருக்கிறீர்கள்; பல்லாண்டுகளுக்கு இருப்பீர்கள்; அதைப் பணமாக்கிக் கொள்ளும் முயற்சியே இது என்றார்.

‘அப்படியானால், நூல் எழுத மறுத்து விடுகிறேன். தயவு செய்து நீங்கள் தவறாகக் கருதாதீர்கள்’ என்று கூறி விடைபெற்றுக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/322&oldid=623242" இலிருந்து மீள்விக்கப்பட்டது