பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 327

அதேபோது, சென்னையில் இருந்த பிரிட்டிஷ் கெளன்சில் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டார். o

நான்கு திங்களுக்கும் குறையாது என்னுடைய பிரிட்டன் பயணத்திற்குத் திட்டம் போட்டுத் தரும்படி அவர்களைக் கோரினார்.

என்னுடைய பயணச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று

துணிந்து தெரிவித்தார்.

அம் முயற்சிகள் நன்றாகப் பலித்தன.

புதிய கார் வாங்கிக்கொள்

இதற்கிடையில் இயக்குநர் என்னை அழைத்தார். ‘நெ.து. சு. உன் கார் பழையது; சில ஆண்டுகள் வரையில் தான் தொல்லை கொடுக்காது ஒடும். போகிறது போகிறாய் இங்கிலாந்தி லிருந்தே புதிய கார் ஒன்று வாங்கிக்கொண்டு வந்து விடு’ என்று சொன்னார்.

இடி வீழ்ந்தாற்போல் இருந்தது. ‘புதிய காருக்குப் பணம் இல்லை அய்யா!’ என்றேன். திரு. ரெட்டியார், என் எதிரில், சென்னையில் உள்ள ஆஸ்டின் கார்’ ஏஜென்சியோடு தொலைபேசியில் பேசி,

‘ஆஸ்டின் 40 இன் அப்போதைய இலண்டன் விலை; அங்கிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்ய வரி; அதில் தள்ளுபடி’ முதலிய வற்றைக் கேட்டுக் கொண்டார்; விரைவாகக் கணக்குப் போட்டார். இறுதியிலே,

‘கார் கம்பெனியாரை வரச்சொல்லுகிறேன்; நீ இலண்டனுக்குப் போனதும் காரை உன்னிடம் கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறேன்.

‘அவர்களே, காரோட்டியை ஏற்பாடு செய்து, அய்ந்தாறு கல் ஒடவைத்து, திரும்பவும் காரை வாங்கி அவர்களே வைத்துக் கொள்ளுவார்கள்.

‘நீ வரும்போது கப்பலேற்றி அனுப்பி விடுவார்கள். அங்குப் பயன்படுத்தப்பட்டது என்பதால், இறக்குமதி வரியில் கழிவு உண்டு.

‘பதினோராயிரம் ரூபாய் கொடுத்துப் புதுக் கார் வாங்கி விட்டால்,

ஒய்வு பெறும்வரை அது பயன்படும், இங்கிலாந்தில் விற்கும் கார்கள் அவ்வளவு உறுதியானவை’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/337&oldid=623258" இலிருந்து மீள்விக்கப்பட்டது