பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329 ந்தரவடிவேலு “

சிறுதொகையை மட்டும் இங்கு வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட பல ஆயிரங்களை, இலண்டன் இலாயிட்ஸ் வங்கியின் கிளை ஒன்றிற்கு மாற்றச் சொன்னேன்.

அதற்கான ஏற்பாடுகளை வங்கியார் செய்து இருந்தார்கள். இந்தியத்துதரகத்திற்கு அருகில் உள்ள கிளை ஒன்றில் என் பெயரில், வங்கிக் கணக்கு, நான் போய்ச் சேருமுன் தொடங்கப்பட்டு இருந்தது.

அத் தகவல், நம் துதரகத்தில் எனக்காகக் காத்திருந்தது.

அதன்படி, அவ்வங்கிக்குச் சென்றேன். இலண்டனில், முதல் பணமாகப் பெற்ற பணத்தில் பெரும் பகுதியை அதில் கட்டினேன்.

பணம் கட்டுவதற்கான சீட்டை நிரப்பி பணத்தோடு கொடுத்தேன். கணக்கர், அதைச் சரிபார்த்துவிட்டுப், பதிவேட்டில் குறித்துக் கொண்டார்.

என்னைப் பார்த்து, “பணம் சரியாக இருக்கிறது, அய்யா!’ என்றார். ா அசையவில்லை.

மீண்டும் ‘சரியாக இருக்கிறதய்யா’ என்றார். அப்போது, நான், பற்றுச் சீட்டு எங்கே?’ என்றேன்.

_அவர், எரிச்சல் கொள்ளவில்லை. மெய்யான புன்முறுவலோடு, ‘இந்த நாட்டில், வங்கியில் பணம் போடும்போது, வாடிக்கைக் பருக்குப் பற்றுச் சீட்டு கொடுக்கும் வழக்கம் இல்லை, அய்யா!’ _iறார்.

அப்போது, நான் எனது உயர்கல்வியில் படித்தது நினைவிற்கு வlதது.

அது என்ன? பிரிட்டனில் வங்கி யில் பணம் போடுவோர், பற்றுச்சீட்டுப் ol. |றுவதில்லை.

ஆனால் எவருடைய நிதியிலும் துண்டு விழுந்ததில்லை _பதாகும்.

அது நினைவிற்கு வரவும், வேறு வழியின்றி அங்கிருந்து விலகிச் _ங்றேன்.

அடுத்த சில நாள்கள்வரை, நான் காண நேர்ந்த எல்லா |யர்களிடமும் இந் நிகழ்ச்சியைக் கூறி, ‘பணம் பத்திரமாக பருக்குமா என்று விசாரித்துக் கொண்டே இருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/345&oldid=623267" இலிருந்து மீள்விக்கப்பட்டது