பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நினைவு அலைகள்

‘ஒரு காசும் குறையாது’ என்றே எல்லோரும் தைரியம் கூறினர். அய்ந்து திங்களில் நான் கண்டதும் அதுவே.

பி.பி.சி. மாத்ருபூதம் -

இரண்டாம் நாள் மாலை நாங்கள் தங்கியிருந்த இல்லத்திற்குத் தமிழர் ஒருவர் வந்தார்.

மேனாட்டு உடையில் இருந்த அவர் எங்களை அணுகி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

‘என் பெயர் மாத்ருபூதம். நான் இங்கு பி.பி.சி.யில் பகுதி நேரப் பணியாற்றுகிறேன்’ என்றார். நாங்கள் யார் என்பதைத் தெரிவித்தோம்.

பிறகு கலகலப்பாக உரையாடினோம்.

அவர் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். எம்.ஏ. பட்டம் பெற்றவர்; இரண்டாவது உலகப்போருக்கு முன்பு, கிறித்தவ இளைஞர் கழகத்தின் வாயிலாக இங்கிலாந்திற்கு வந்தார்.

உலகப்போரின்போது, துனைப்போர்ப் பணியில் இருந்தார். அமைதி திரும்பிய பிறகு, பி.பி.சி.யின் தமிழ்ப் பிரிவில் சேர்ந்தார். இந்துவாக வந்தவர் கிறுத்தவராக மாறிவிட்டார்.

நாங்கள் இன்னும் நான்கு நாள்களில் ஏதாவது ஒர் ஒட்டலுக்கு மாறவேண்டும் என்பதைக் கூறினேன்.

தம் வீட்டில் இரு படுக்கைகள் உள்ள அறையொன்று காலியாக இருப்பதாகவும், அங்கு வந்து தங்கலாம் என்றும் யோசனை கூறினார்.

‘இங்கிலாந்து போன்ற மேனாடுகளில் பணம் கொடுத்துத் தங்கும் விருந்தாளி’ முறை உண்டு.

‘ஓர் ஊருக்கு வருவோர், அத்தகைய ஒரு குடும்பத்தில் தங்குவர்.

‘இரவுக்கு உறங்கும் இடமும், காலைச் சிற்றுண்டியும் விருந்தாளிக்கு அளிப்பது அந்த வீட்டுக்காரர் பொறுப்பு.

‘இரண்டிற்கும் சேர்த்தே கட்டணம் வாங்குவார்கள்.

‘அம் முறைப்படி, என்னோடு தங்கலாம்’ என்றார்.

அடுத்த நாள், எங்களை அழைத்துப்போய்த் தம் வீட்டைக் காட்டினார்.

சூழலும், வீடும், எங்களுக்கு ஒதுக்கிய அறையும் பிடித்திருந்தன. அங்குப் போய்த் தங்க முடிவு செய்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/346&oldid=623268" இலிருந்து மீள்விக்கப்பட்டது