பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38B நினைவு அலைகள்

எவர் முதலமைச்சராவது என்ற கேள்வி பிறந்தது. திரு. சி. சுப்பிரமணியம் முதலமைச்சராக வேண்டும் என்று அகில இந்திய காங்கிரசின் மேலிடம் அறிவித்தது.

திரு. சி. சுப்பிரமணியம், அப்போது வழக்கறிஞராக விளங்கினார். திங்களுக்கு நாலாயிரம் ரூபாய்போல் சம்பாதித்தார்.

அவர் திரு. பா.ச. கைலாசம் அவர்கள் இல்லத்தில் சேத்துப்பட்டில், பச்சையப்பன் விடுதி சாலையில் வந்து தங்கினார்.

மேற்படி அறிவிப்பு வந்த சில மணிகளுக்குள் நான் அங்குச் சென்று. முதலமைச்சர் என்று குறிப்பிடப்பட்ட திரு. சி.சு. வுக்கு மாலை யணிவித்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி நீர்க்குமிழ் ஆகிவிட்டது. முடிவில் மாற்றம். இராசாசி முதல்வர் ஆனார்.

மேலிடம் தனது முடிவை மாற்றிக் கொண்டது; இராசாசி அவர்களை முதல் அமைச்சராக்க விரும்பியது.

காமராசரை இராசாசியிடம் துாது அனுப்பியது. காமராசர், இராசாசியை முதல்வராக இசைய வைத்தார். அதனால், சி.சு. வுக்கு ‘கை'க்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்று. o

முதலமைச்சர் இராசாசி, தமது அமைச்சரவையில், திரு.சி. சுப்பிரமணியத்தைச் சேர்த்துக் கொண்டு, அவரை நிதி அமைச்சர் ஆக்கினார்.

திரு. சி.எஸ். காலமெல்லாம் இராசாசியிடம் பற்றோடு வாழ்கிறார். கல்வி அமைச்சர் யார்? ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் எம்.வி. கிருஷ்ணராவ்.

இராசாசிக்குச் சட்டமன்ற உறுப்பினர் பதவிபெற என்ன செய்தார்கள்.

தேர்தலுக்கு நிற்க வைக்காமல், ஆளுநர் நியமனத்தால், சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினர் ஆக்கினார்கள்.

முதல்வர் இராசாசிக்குப் பெரியார் ஆதரவு

இராசாசி, பெரியார் ஈ.வெ.ரா.வின் ஆதரவைக் கோரி துது அனுப்பினார்.

பெரியார், தமக்கே உரிய தனியான பெருந்தன்மையோடு திரு. இராசாசியை ஆதரிக்க முன்வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/404&oldid=623333" இலிருந்து மீள்விக்கப்பட்டது