பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நினைவு அலைகள்

‘'காந்தம்மா இப்போது வேலையை விடவேண்டாம். பள்ளி நிர்வாகம் விடச் சொன்னால் கூட அவருக்குச் சட்டப்படி உள்ள உரிமையைக் கைவிட வேண்டாம், மாறாகக் கல்வித்துறைக்கு முறை இடட்டும். நான் பார்த்துக் கொள்ளுகிறேன். ‘

‘உரிமையைவிட, பொது நன்மை பெரிது’ என்று காந்தம்மா நினைத்தார்.

நானும் அப்படியே நினைத்தேன். மறுநாள், எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்வதாகத் தாளாளரிடம் அறிவித்துவிட்டார். s

சில நாள்களில் புதிய ஆசிரியை ஒருவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. காந்தம்மா அந்தக் கணமே வேலையில் இருந்து நீங்கிக் கொண்டார். எந்த அலுவலுக்காக நியமிக்கப்படுகிறோமோ அந்த அலுவலுக்கே கேடு விளைவிக்கும் அளவு தத்தம் உரிமைக்காக மட்டுமே போராடும்

இக்காலத்தவர், எங்களைப் பைத்தியம் என்று கருதினால்

வியப்பில்லை.

3. விம்மி விம்மி அழுதேன்

பள்ளிப் படிப்பு எட்டாத காலம்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டில் கோவை நீலகிரி மாவட்டங்கள் இரண்டிற்குமாக, ஒரே ஒரு மாவட்டக் கல்வி அலுவலரே இருந்து பணி செய்து வந்தார்.

அதேபோல், ராயலசீமைப் பகுதியில் கடப்பை, கர்னூல் ஆகிய இரு மாவட்டங்களை இணைத்து, ஒரே ஒரு மாவட்டக் கல்வி அலுவலரின் மேற்பார்வையில் வைத்திருந்தார்கள்.

அது எப்படி முடிந்தது?

கல்வி நிலையங்கள் மிகவும் குறைவாக இருந்ததால் முடிந்தது.

இந்தியாவின் பிற மாகாணங்களில் இருந்தது போன்றே, சென்னை மாகாணத்திலும் தொடக்கப் பள்ளிக்கூடம் இல்லாத சிற்றுார்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. உயர்நிலைப் பள்ளிகள் எல்லாப் பேருர்களிலும் இருந்தன என்று சொல்லமுடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/44&oldid=623372" இலிருந்து மீள்விக்கப்பட்டது