பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவ டி. வே l 29

மனிதர்களை மக்களாக்கும் அடிப்படைச் செல்வமாகிய கல்வி வாய்ப்புகள்கூட பெறாதவர்களே, அன்று நம் மக்களில் பெரும்பாலோர் ஆவார்.

ஆண்ட ஆங்கிலேயர், மாந்தர் உரிமைகளில் முன்னதான கல்வியைப் பொதுச் சொத்தாக்காதது தவறு.

அதைப்பற்றிக் கவலைப்படாதது, நம் மக்களின் அறியாமை.

இந்த அவலம் முழுமையாகத் துடைக்கப்படாதது அநீதி. எந்த அளவிற்கு நமது மாநிலத்தில் கல்விப் பற்றாக்குறை இருந்தது?

அன்று கோவை மாவட்டத்தின் சிறந்த நகரமான காங்கேயத்தில் உயர்நிலைப் பள்ளி கிடையாது; நடுநிலைப் பள்ளி ஒன்று மட்டுமே இருந்தது.

மொத்தத்தில், இன்றைக்கு இருக்கும் உயர்நிலைப் பள்ளிகளில், நான்கில் மூன்று பங்கு, தன்னாட்சி இந்தியாவில் தோற்று விக்கப்பட்டவை.

காங்கேயம் நடுநிலைப்பள்ளியை ஆண்டுத் தணிக்கை செய்ய, மாவட்டக் கல்வி அலுவலர் திரு. இரகுநாதன் சென்ற போது, நானும் அவருடன் சென்றேன்.

தாராபுரம் உயர்நிலைப்பள்ளியை அவர் தணிக்கை செய்த போதும் நான் உடன் இருந்து உதவினேன்.

தாராபுரத்தில், முன்னர்க் காணாத அனுபவம் எனக்குக் கிடைத்தது.

அது என்ன? ஆடிக்காற்றின் வலிமையை முழுமையாக உணர்ந்தேன். ‘ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என்பது நாட்டு வழக்கு.

4 or o) or LTI or LD (of PIH/ 4, 20 L/ L- பD 9 ட அ , தி 9 T .ெ அ டட சென்னையிலும் செங்கற்பட்டிலும் ந்தக் காற்றின் அட் காசத்தை எதிரிட்டது உண்டு.

ஆனால் தாராபுரம் காற்றோ, வலிமையின் எல்லையாக அடித்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் நகர் மன்றம், ஒர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியை நடத்தி வந்தது.

அப்பள்ளியைத் தணிக்கை செய்ய மாவட்டக் கல்வி அலுவலர் சென்றபோது நானும் அவரோடு சென்றேன்.

அவரது காரில் சென்றோம்; பெட்ரோல் செலவுக்கென்று அவர் என்னிடம் ஏதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/45&oldid=623383" இலிருந்து மீள்விக்கப்பட்டது