பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 நினைவு அலைகள்

‘ஆட்சியே, கல்வி இயக்கமே, தீட்டும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதும், அதில் சிக்கல்கள் கேடுகள் வந்தால், உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுபோய், பரிகாரம் தேடுவதும்,

‘தென்னிந்திய ஆசிரியர்களின் நீண்ட நெடிய நல்ல மரபு.

‘அந்த மரபு முறியாமல் பார்த்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.

‘இத் திட்டம் பற்றிய சழக்கினை, மற்றவர்களுக்கு விட்டு விடுவோம்; இதை விழிப்போடு செயல்படுத்தி, பலாபலன்களைக் காண்போம்.

‘சென்னை மாகாணத்தில் பன்னிரண்டாயிரம் பள்ளிகள் போல், ஒராசிரியர் பள்ளிகளாகவே நடக்கின்றன’’

‘அவற்றில் பெரும்பாலானவற்றில் அய்ந்து வகுப்புகள் உள்ளன.

‘ஒருவரே ஒரே நேரத்தில் அய்ந்து வகுப்புகளுக்கு எப்படிப் பாடம் சொல்ல முடியும்?’

‘அந்த ‘பஞ்சாவதானத்தால் முழுப் பலன் கிட்டுமா?

‘புதிய கல்வித் திட்டம் ஒர் ஆசிரியரே அய்ந்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் பொறுப்பை மாற்றி விடவில்லை. ‘

‘ஆனால், இரு அரை வேளைகளாகப் பிரித்துக் கற்பிக்கச் சொல்லுகிறது.

‘அதாவது, ஒரு வேளை இரண்டு வகுப்புகளையும், மறுவேளை மூன்று வகுப்புகளையும் ந்டத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

“இதை வேறொரு வகையில் பார்த்தால், தனிப்பாடம் பிரைவேட் டியூஷன் போன்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டுள்ளது.

‘அதனால், எல்லோரையும் தேர்ச்சி பெற வைக்கும் நல்ல வாய்ப்பு முளைத்து உள்ளது.

‘இதே போல்தான், இரு ஆசிரியர், மூன்று ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகளில் ஒரு வேளை மூன்று வகுப்புகளும், மறுவேளை இரு வகுப்புகளும் நடக்கும்.

‘அதாவது, தனிப்பாடச் சூழல் வளர்ந்துவிட்டது.’

‘இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிகப்படியானவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யுங்கள். ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/446&oldid=623379" இலிருந்து மீள்விக்கப்பட்டது