பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 447

சில பெயர்கள் ஆலோசனைக்கு வந்தன. எவர் எவருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கலாம் என்று கணக்கு ‘ப் போட்டுப் பார்த்தனர்.

டாக்டர் சுப்பராயன் மறுப்பு

டாக்டர் சுப்பராயனை நிறுத்தினால், வெற்றி உறுதி என்று

கருதப்பட்டது. அவரை அணுகி, சென்னை மாநில முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்க விரும்பி வேண்டினர்.

டாக்டர் சுப்பராயன் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். டிரன்?

‘இராசாசி எனது அரசியல் குரு போல. அவர் இடத்திற்கு நான் முயல்வது முறையல்ல. அவருடைய வேட்பாளருக்குப் போட்டியாக நிற்பது குருவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும் ‘ என்பது டாக்டர் சுப்பராயனின் பதில்.

காமராசர் நின்றார்

இராசாசிக்கு எதிராக அணி திரண்டவர்களுக்கு அது பெரிய சோதனைக் காலம். இராசாசியின் வேட்பாளர் என்றால், குலக் கல்வி நீடிக்கும். அதோடு, பொதுமக்களிடம் அவர்கள் செல்வாக்கு குறைந்து விடும். இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் இராசாசி எதிர்ப்பாளர்கள் அனைவரும் காமராசர் அவர்களைச் சட்டமன்ற காங்கிரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடச் செய்தனர்.

தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் என்ற முறையில், காமராசர் ஏற்கெனவே குலக்கல்வி முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அது அடுத்த கல்வி ஆண்டில் எடுபடலாம் என்று நம்பிக்கையூட்டி தம் கட்சிக்குள் இருந்த எதிர்ப்பைத் தணித்து வைத்திருந்தார்.

ஆகவே, காமராசர் ஆட்சிப் பதவி விலங்கை மாட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

குருசாமி இல்லத்தில் காமராசர்

அந்தக் காலகட்டத்தில் காமராசர் செனாய்நகரில் என் வீட்டிற்கு

நான்கு வீடுகள் தள்ளி இருந்த குத்துாசி குருசாமியார் இல்லத்திற்குப்

பலமுறை வந்து, கலந்து ஆலோசித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/463&oldid=623398" இலிருந்து மீள்விக்கப்பட்டது