பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 453

அனுமதி கிடைத்தது

இயக்ககம் வந்து, இயக்குநரிடம் நடந்தபடியே சொன்னேன்.

வருத்தம் அவரைக் கெளவிற்று. நான் திறமையாகச் சமாளிக்கவில்லை,

என்று எண்ணியதுபோல் தோன்றிற்று.

அடுத்த நாள், அப் பள்ளியின் சார்பில் அதன் செயலரும் வழக்கறிஞரு மான சண்முகவேலு, கல்வித்துறை இயக்குநரைக் கண்டார். தாம் கொண்டு வந்த கடிதத்தைக் கொடுத்தார்.

‘இப்போதைக்கு முதல் மூன்று படிவங்கள் நடத்த அனுமதி தாருங்கள். அடுத்த ஆண்டிற்குள் புதிய கட்டடம் கட்டிவிட்டு, மேல் வகுப்புகளை வாங்கிக்கொள்கிறோம்’ என்று அந்தக் கடிதம் கூறிற்று.

இயக்குநர் அப்படியே, முழுமை பெறாத மூன்று படிவங்கள் கொண்ட உயர்நிலைப் பள்ளியை நடத்தும் உரிமையை வழங்கினார்.

அது படிப்படியாக வளர்ந்தது. பெரிய உயர்நிலைப் பள்ளியாகப் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு இன்று கல்விஅறம் ஆற்றி வருகிறது.

57. பொதுக் கல்வி இயக்குநரானேன்

தணிக்கையாளர் குறும்பு

மாந்தர் வாழ்க்கையில் காண்பது என்ன? பெரியவர்கள்கூட, சிறியனவற்றைப் பற்றிய விவகாரங்களில், அதிக அக்கறையும் முனைப் பான ஈடுபாடும் காட்டி, அருமையான பொழுதை வீணாக்குவதைக் காண்கிறோம்.

அரசு ஊழியர்கள் இதற்கு விலக்கல்ல. அவர்களுடைய போக்கு சில பவளை, சிரிப்பிற்கு இடம் கொடுப்பது உண்டு.

நான், இரு துணை இயக்குநர் பதவிகளை ஒரே நேரத்தில் ஏற்றிருந்த கட்டத்தில் இயக்ககக் கணக்குகள், ஆண்டுத் தணிக்கைக்கு உட்பட்டன. புரட்டோ, பொறுப்பு இன்மையோ, கோப்புகள் இன்மையோ

வறு ஒன்றுகூடத் தென்படவில்லை.

தணிக்கை செய்யும் தொழிலில் இருப்பவர் குறை சொல்லக் கற்பதே முதல் வேலை என்று அறிவுரை சொல்லவில்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/469&oldid=623404" இலிருந்து மீள்விக்கப்பட்டது