பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 33

அது நினைவுக்கு வரவும் அழுவதற்கு வெட்கப்பட்டேன்: வெட்கத்தை வேதனை வென்றது. அழுது ஒய்ந்தேன். பின்னர் தலைமுழுகினேன்.

சிந்தனை விரைந்தது. தந்திச் செய்தி பளிச்சிட்டது.

‘செப்டம்பர் 21 ஆம் நாள் என் தாய் மறைந்தார். இது தந்திச் செய்தி.

அடுத்த நாள் எரியூட்டப்பட்டது என்பது தம்பியின் குறிப்பு.

மூன்றாம் நாள், தந்தியும் குறிப்பும் அஞ்சல் வழி எனக்கு டனுப்பப்பட்டது. உள்ளுரில் அஞ்சல் நிலையம் இல்லாமையால், வாலாஜாபாத் சென்றவர் வழியாக அவை அனுப்பப்பட்டன.

‘இத்தகவலை நான் கொடுத்தேன் என்பது தெரியவேண்டாம்!” சிவானந்தம் இப்படியொரு குறிப்பும் அனுப்பியது வேதனையை மேலும் பெரிதாக்கிற்று.

என் தாய்

என்னிலும் எடுப்பான என் அன்னையின் உருவம் மனக்கண் முன் பளிச்சிட்டது. பொறுமையின் உருவம் அது.

செல்வத்தில் பிறந்து, செழிப்பில் வாழினும் செருக்குக் கொள்ளாத தாயின் உருவம் நிழலாடிற்று.

வீட்டிலுள்ளவர்களுக்குத் தொண்டு செய்வதோடு, தொழுவத்தில் இருந்த மாடு கன்றுகளையும் களத்து மேட்டு ஒப்படியையும் சுணங்காது கண்காணித்த தாயின் உருவம் ஒடிற்று.

சுற்றம் தழுவுவதிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் புகழ் பெற்ற என் அருமைத் தாய், எல்லோரையும் போல, சூழ்நிலையின் சாவி’ப் பயிர். வீட்டில் வளமிருந்தாலும் பெண்கள் எழுத்தறிவு பெறக் கூடாது என்பது எங்கள் சுற்றத்தாரின் மரபு. என் தாய் அவ் வநீதியின் கடைசி அடையாளம்.

முதற் பிள்ளை பெற்றபின், இரவிக்கை அணியக்கூடாது என்பது ாங்கள் சாதிச் சிறுகூட்டத்தின் மூடப் பழக்கங்களில் ஒன்று.

அந்தப் பழக்கத்தின் கடைசி அடிமை என் தாய். சிரிக்காதீர்கள் மற்றவர்கள் முன்பு கணவனோடு மனைவி பேசக்கூடாதென்பது மற்றோர் மரபு. அம் மரபால் “ஊமையானவர்’ ான் அருமை அன்னை.

உணவு பரிமாறும் போதும், என் தந்தை என் தாயோடு, பேசிப் ார்த்தது இல்லை. தாய் கைக் குறிப்பைக் கொண்டே செயல்பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/49&oldid=623417" இலிருந்து மீள்விக்கப்பட்டது