பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நினைவு அலைகள்

பல தலைமுறைகளாக இழையோடி வரும் நல்லியல்புகளோடு, சேர்ந்துள்ள மூடப்பழக்கங்கள் என்னும் என்புருக்கி'யால், நலிந்து போனவர் என் தாய்.

என்னையும் என் இளவல்கள் மூவரையும் பெற்று வளர்த்த மகிழ்ச்சியை வேளைக்கு வேளை கொப்பளிக்கும் கணவரின் வெகுளியால் சுடுசொற்களால் தேயவிட்டு, வாடிய சான்றோர் என் தாய்.

நாங்கள் ஆளாகி, சான்றோர் எனப் பெயர் பெறுவதற்கு முன், தனது எண்ணம்போல், பூவோடும் பொட்டோடும் மறைந்தவர், என் தாய்.

எனது புரட்சி நடவடிக்கையால் எத்தனை வேதனைப்பட்டாரோ என் தாய்!

பெரிய சமுதாய மாறுதலுக்குப் பெரிய விலை கொடுக்கத் தான் வேண்டும் மகனைப் பார்க்க முடியாத விலையையா கொடுக்க வேண்டும்.

4. தந்தையாரைக் கண்டேன்

ஈராண்டுக்குப் பின் நெய்யாடுபாக்கம்

தாயின் மறைவு பற்றிய துயரச்சுமையோடு, திருப்பூரில் இருந்து புறப்பட்டேன். கோவையை அடைந்தேன். பழக்கத்தால், வீடு தேடிச் சென்றேன்.

வீடு சேர்ந்ததும்,

‘அத்தான், என்னால் அல்லவா, உங்களுக்கு இந்த நிலை; இவ்வளவு ஒதுக்கீடு; இழிவு’ என்று என் அருமை மனைவி காந்தம்மா அலறினார். நானாகத் தேடிக்கொண்டது; உன்னால் நேர்ந்ததல்ல” என்று கூறிக் காந்தம்மாளைத் தேற்ற முயன்றேன்.

‘முன்பு, லிங்கமும் பொன்னம்பலனாரும் சேர்ந்து, நம் இருவரையும் உங்கள் ஊருக்கு அழைத்துப்போக முன்வந்தார்களே! அதற்கு உடன்பட்டிருந்தால், உங்கள் அருமை அம்மாவை உயிரோடு பார்த்து இருப்பீர்களே! -

‘என்னை ஏசுவார்கள் என்று சொல்லிப் போக மறுத்து விட்டீர்களே! ‘உங்கள் அம்மாவிற்கு உடல் நலம் இல்லை என்ற பேச்சு, காற்றுவாக்கில் நமக்கு எட்டவில்லையே. எவ்வளவு கடுமையான இரும்புத்திரை’ என்று காந்தம்மா வருந்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/50&oldid=623419" இலிருந்து மீள்விக்கப்பட்டது