பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 45

மறுநாள் மாலை, ஆமதாலவலசா புகைவண்டி நிலையத்தை அடைந்தோம்.

அங்கே இறங்கிய பயணிகள் சிலரே.

‘சிறிய நிலையம் ஆயிற்றே. இரண்டொரு மனித்துளிகளில் இரயில் புறப்பட்டு விடுமே என்று அஞ்சிய நான், முன்கூட்டியே - விசயநகரத்திலேயே - வண்டியின் காவலரிடம் அது பற்றிய என் கவலையைக் கூறினேன்.

‘கவலைப்படாதீர்கள்! உங்கள் பெட்டிகளெல்லாம் இறக்கப்படும் வரை வண்டியை நிறுத்தி வைக்கிறேன்’ என்று காவலர் உறுதி கூறினார்.

இது, ஏதோ ஒரு நல்ல காவலர், அன்றைய புகைவண்டியில் வந்ததால் கிடைத்த உறுதி அல்ல. ==

அந்தக் காலத்தில், இரயில் வேக்கள், ஆங்கிலேய கம்பெனிகள் நடத்தின. அன்னியர்களுக்கு ஏவல் செய்தே பழக்கப்பட்ட நம் மாழியர்கள், போதிய அளவு, பொறுப்போடும் கட்டுப்பாடோடும் செயல் புரிந்தார்கள். பயணிகளிடம் பரிவோடு நடந்தார்கள்.

அதுவும் முதல் வகுப்புப் பயணிகளுக்குக் கிடைத்த கவனிப்பே த.வி. புது மாப்பிள்ளைக்குக் கிடைக்கும் மதிப்பு கிடைக்கும்.

ஆங்காங்கே, சிற்றுண்டி, உணவு முதலியன கலப்படம் இல்லாமல் பெற முடிந்தது. பரிமாறுவோர் பணிவோடு செயல்பட்டனர்.

எனவே, மனநிறைவோடு, நீண்ட பயணத்தை முடித்துக் கொண்டு, ஆமதாலவலசாவில் இறங்கினோம்.

வண்டி நிற்கவும் நான் தலையை நீட்டவும், நொடியில் மகிழ்ச்சியான காட்சி தென்பட்டது.

பலர் அடங்கிய குழுவொன்று, திறந்த பெட்டியை நோக்கி விரைந்து வந்தது. எங்களை வரவேற்கவே வருகிறார்கள் என்று எண்ணினேன். அடுத்த வினாடி அது உறுதியாகிவிட்டது.

‘பில்லை சேவகர் இருவர் வருவது கண்ணில் பட்டது. நான் தரையில் காலெடுத்து வைக்கவும் அவ்விருவரும் என்னிடம் ஒடி வந்து வணங்கினார்கள்.

‘மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்கள்’ என்று அவ்விருவரும் தெலுங்கில் சொல்லியதைத் தமிழாக்கம் செய்து கொண்டே, என் மனைவி இறங்கினார்.

அதற்குள், அலுவலகத் தலைமை எழுத்தர், பிற எழுத்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/61&oldid=623431" இலிருந்து மீள்விக்கப்பட்டது