பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 47

சாலையோ, கருங்கல் கப்பி போட்டது. வழிநெடுகிலும் குண்டும் குழியுமான பள்ளங்கள். ஆளைக் குலுக்கி எடுப்பத்தில் அதற்கு இணையாக வேறு ஒன்றை அதுவரை நான் கண்டது இல்லை.

ஆனால் மகிழ்ச்சியடைந்தேன். எதனால் 2 சாலையின் இரு மருங்கிலும் உயர்ந்த ஆலமரங்கள் அணிவகுத்து நின்றன; பந்தலென நின்றன. -

அன்னியர் இந்த நாட்டை ஆண்டபோது, பல நெடுஞ்சாலைகளில், பிறு சாலைகளில், இரு பக்கங்களிலும் நெடு மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன.

அவை, கண்டவர்களால் சிதைக்கப் படவில்லை. காற்று மண்டலத்தைத் துப்புரவாக வைக்கவும் வெப்பத்தைத் தணிக்கவும்

தவின. மழையை வரவழைத்தன. இன்றோ?

அன்று இருபுற இயற்கைச் சூழலையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்ததால், நேரம்போனது தெரியவில்லை.

இறுதியில், சீகாகுளம் பேருந்து நிலையத்தில் வண்டி நின்ற போது, கைக் கெடிகாரத்தைப் பார்த்தேன்.

வழிப்பயணத்திற்கு நாற்பது மணித்துளிகள் பிடித்தது என்று தெரிந்தது.

கோகுளத்தில் எங்கே தங்கினோம்? பயணிகள் விடுதியில். ஒட்டல் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சாப்பாட்டிற்காகக் காத்திருக்கையில், ஆமதாலவலசா, இரயில் நிலையத்தில், ஒரு தெலுங்கர் என்னைச் சுட்டிக்காட்டி, விசாரித்ததைப் பற்றி என் மனைவியிடம் கேட்டேன். அவர் தமிழாக்கம் செய்தார்; விவாம் புரிந்தது.

அாவாடு

தெலுங்கர்கள், தமிழை அரவம் என்று சொல்வது மரபு. காரணம் என்ன தெரியுமா? ஆதி நாளில் ஆந்திர நாட்டின் ால்லையில் இருந்த தமிழ் நாட்டின் பகுதிக்கு அரவ நாடு என்று பெயர். தமிழ் நாட்டின் ஒரு பகுதியான அரவ நாட்டினர் பேசியது தமிழ். எனவே தங்கள் நாட்டின் எல்லையில் இருந்த அரவ நாட்டினர் பயை தமிழையே அரவம் என்று பாமரத் தெலுங்கு மக்கள் சொல்லி

வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/63&oldid=623433" இலிருந்து மீள்விக்கப்பட்டது