பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த சுந்தரவடிவேலு 61

தெரிந்தவர்கள் யாருமில்லாத ஊரில், தொலையூரில், இப்படி பாட்டிக்கொண்டோமே என்று கண்கலங்கினேன்.

_ாக்டர் ராய் அம்மையார் திறமையும் பரிவும் கனிவும் பொறுப்புணர்ச்சியும் செறிந்தவராகத் தென்பட்டார்.

அது சிறிது ஆறுதல் தந்தது. ஆனாலும் கவலை மின்னியபடி மருந்தது.

நான்கு நாள்களுக்குப் பிறகு, காந்தத்தின் காய்ச்சல் குறைந்தது. வழித்துணையாக வந்து தோன்றிய ராய் அம்மையாரைப் பற்றிப் பபசப்பேசி, மனக்கவலையை மறந்தோம்.

அம்மையார் வீட்டு உணவைக் காந்தம் உண்டதைக் கண்டு, அவர் பெருமகிழ்ச்சி கொண்டார்.

தொழில் ஈடுபாட்டோடு பாச உணர்வும் கலக்க, மருத்துவம் பார்த்து, உடல் நலத்தைக் கொடுத்து, பரிவுடன் வீட்டிற்கு _wறுப்பினார். -

ஒாாண்டிற்குப் பிறகு, மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டது.

அப்போதும் ராய் அம்மையாரின் மருத்துவத்தால், எளிதில், காந்தம்மா உடல் நலம் பெற்றார்.

காந்தம்மாளுக்கு ஆய்வாளர் பதவி

இதற்கிடையில், கோகுளம், பெண் தொடக்கப் பள்ளிகளின் ஆய்வாளர், விடுப்பில் சென்றார்.

அவ்வளவு தூர இடத்திற்குப் பெண் ஆய்வாளர்கள் வரத் தயங்கினார்கள்.

அந் நிலையில், எதிர்பாராத ஆணை ஒன்று வந்து சேர்ந்தது. காந்தம்மாவை அன்றாட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பெண் ஆய்வாளராக நியமித்திருப்பதாக அவ்வானை அறிவித்தது.

அதாவது ஊர் ஊராகச் சுற்றி, தணிக்கை செய்ய வேண்டியதில்லை. அன்றாட அஞ்சல்களை உடைத்துப் பார்த்து, உடனுக்கு உடன் பதில் எழுதினால் போதும் என்பதாகும்.

அப் பொறுப்பைச் சரிவர நடத்த நான் ஆலோசனை கூறினேன். அதனால் என் வேலைப்பளு மிகுதியாயிற்று.

சிலபோது, சில நாள்களில் மட்டும் மான்ய பில்களில், அய்யாயிரம் கையெழுத்துகள் போட நேரிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/77&oldid=623448" இலிருந்து மீள்விக்கப்பட்டது