பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லிப் பயணம் 21 சென்னை மாகாண அரசின் துறைத் தலைவர்கள், விமானத்தில் பயணம் செய்யலாம்! இரயிலில் போவதானால், குளுகுளு வண்டி இருந்தால் அதில் செல்லவும் உரிமை உண்டு. நான், தில்லிக்கு விமானத்தில் செல்வதை விரும்பவில்லை. காரணம்? இரயிலில் செல்லும்போதுதான் எனக்குச் சற்று ஒய்வு கிடைக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்கும். * செய்ய வேண்டிய அலுவல் பற்றிச் சிந்தித்துக் குறிப்புகள் எழுதி வைத்துக்கொள்ள நேரம் கிடைக்கும். இரயிலில் பயணம் செய்யும்போது, என்னுடைய குறிப்பு நூலையும் கையோடு வைத்து இருப்பேன். இன்னார் இன்னது கேட்டார்கள் அந்த ஊருக்கு அதுபற்றி ஆணை அனுப்ப வேண்டும்; இப்படி எண்ணங்கள் எழ எழ, என் குறிப்பு நூலில் குறித்துக் கொள்வேன். பிறர் காணக்கூடாத இரகசியம் ஏதும் அதில் இடம் பெறாது. எனவே, தலைநகருக்கு வந்ததும் எனது தனி எழுத்தரிடம் கொடுத்து, அதில் உள்ள பட்டியலைப் பார்த்து நடவடிக்கையைத் துண்டச் செய்வேன். நான் முதல் முறை புதுதில்லிக்குச் சென்றபோது, கிராண் டிரங் எக்ஸ்பிரஸ் காலையில் சென்னையில் இருந்து புறப்படும். பகல் னவு கூடுரில் கிடைக்கும். இருட்டும் வேளை விஜயவாடா வந்து சேரும் மறுநாள் முழுவதும் ஒடி, மூன்றாம்நாள் காலை தில்லி சென்றடையும். == அந்த கிராண்டிரங் வண்டி ஒன்றுதான் சென்னைக்கும் துல்லிக்கும் நேர் புகைவண்டி அவ் வண்டியில், குளுகுளு பெட்டியில், பயணமானேன்.

- அடிகளாரின் வாழ்த்து முதல் பயணமான்கையால், வழியனுப்பச் சென்னை மத்திய ரயில் |லையத்துக்குப் பலர் வந்திருந்தனர். - = F. LE , - # గా Lii அவர்களில் ஒருவர் திரு. எஸ். வடிவேலு பிள்ளை. அவர் சிறந்த பண்பாளர்: சைவநெறியாளர்; நேர்மையாளர்; பத்துடன் அரசு அலுவல் பார்த்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/61&oldid=788429" இலிருந்து மீள்விக்கப்பட்டது