பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நினைவு அலைகள் எல்லாத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 1. 4, 55 முதல் அவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆயினும் - அத் திட்டம் நடைமுறைககு வந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கோராத பெருநன்மை வானத்திலிருந்து விழும் தங்கக் கட்டிபோல் வீழ்ந்தது. அந்தத் தேதியில் அறுபதாயிரம் பேர்களுக்குமேல் எதிர்பாராத நன்மைகளைப் பெற்று மகிழ்ந்தார்கள். அவர்களிடையே நம்பிக்கை அரும்பத் தொடங்கியது; ஆர்வம் பொங்கிற்று. நன்றி ஊற்றெடுத்து ஒடிற்று. இவற்றின் விளைவாக, ஆங்காங்கே இருந்த தொடக்கப் பள்ளி ஆசிரிய மையங்கள் அரசினுக்கு நன்றி தெரிவித்துத் தீர்மானங்கள் போட்டன. -- அந்தச் செய்திகள் நாளிதழ்களில் வெளியாயின. சலசலப்பு இருவேறு உலகத்தியற்கை கல்வி உலகின் அடிமட்டத்தில் இருந்தவர்கள் பாராட்டுகையில், மேல்மட்டத்தில் உள்ளவர்கள், அரசையும் கல்வித் துறையையும் கடுமையாகக் கண்டித்தார்கள். ஆசிரிய சமுதாயத்தை இப்படிப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு மட்டும் நன்மை செய்வது, "பாரபட்சம் காட்டுவதாகும்’ என்று குற்றம் சாட்டினார்கள். அவர்களில் சிலர், இதை வழக்கு மன்றத்திற்குக் கொண்டு போகப் போவதாக மிரட்டினார்கள். 'குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டதாகுமோ என்று நான் சிற்சிலபோது கவலைப்பட்டேன். முதலமைச்சர் காமராசரோ, கல்வி - நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமோ சலசலப்பைப் பொருட்படுத்தவில்லை. "உலகம் அப்படித்தான். பெரிய உதவியை எளிதில் மறந்துவிடும்! சிறிய தொந்தரவை மறக்காமல் ஒப்புவிக்கும்” என்று காமராசர் தனி உரையாடலில் கூறியது, தெம்பூட்டியது. ஒய்வு பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் 1. 4, 56க்குப் பிறகு மூன்று நன்மைத் திட்டம் வந்தது. அதற்கு முன்பு ஒய்வு பெற்று, உயிரோடு இருப்பவர்களுக்கு? அதே அளவாவது ஒய்வு ஊதியம் கொடுப்பதே நியாயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/84&oldid=788683" இலிருந்து மீள்விக்கப்பட்டது