பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l"lutiectăg. ஊதியத் திட்டம் 45 திட்டத்தை முதலில் ஆயத்தம் செய்யும்போதே, இது |யாவிற்கு வந்தது. ஒய்வு பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 1. 4, 55க்கு பயனர் எத்தனை பேர்களென்று எப்படிக் கணக்கிடுவது? திட்டவட்டமான தகவல்களைச் சேகரிக்க முயன்றால், டி) .சியம் வெளியாகிவிடுமோ என்ற அச்சம் எனவே, அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கும் செலவைச் 11. கவில்லை. எக் காரணம் பற்றி, அப்படி விட்டு இருக்கிறேனென்பதை ய பியவர்களிடம் காதும் காதும் வைத்தாற்போல் சொல்லி வைத்திருந்தேன். எனவே, முந்தைய ஆசிரியர்கள் தங்களுக்கும் ஓய்வூதியம் கோரியபோது, நான் தந்திரமாகச் சிக்கலில் மாட்டிவிட்டதாக அரசு மட்டத்தில் எவரும் நினைக்கவில்லை. சற்றுக் காலதாமதம் ஆனாலும், முன்னரே ஒய்வு பெற்றவர்களுக்கும் ஒய்வு ஊதியம் கொடுக்கும்படி மாகாண ஆட்சி ஆணை பிறப்பித்தது. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலாவது இத் திட்டம் விரிவாக்கப்பட்டதா? இல்லை. அடுத்த ஆண்டு புதிய திட்டச்செலவு, ஐந்தாண்டுத் திட்டத்தின் பகுதியாகிவிட்டதால், அதற்கு ஒப்புதல் பெறுவதில் சங்கடம் அப்பட்டது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத, முன்னோடித் திட்டமாகிய மூன்று நன்மைத் திட்டம், எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று சில ஆண்டுகள்வரை பார்த்தபிறகு விரிவுபடுத்தலாமென்று கட்டை போட்டார்கள். பல திட்டங்களுக்குப் போராடவேண்டியிருந்ததால், 1.455இல் தான் இந்தத் திட்டத்தை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவாக்க முடிந்தது. அடுத்த மூன்று ஆண்டுகள் முயன்றபின் 1. 4, 5 நாளிலிருந்து கல்லூரி ஆசிரியர்களும் மூன்று நன்மைகளுக்கு உரியவர்கள் ஆனார்கள். இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றிய சென்னை மாகாணத்தையும் அதன் ஆட்சியையும் கல்வித் துறையையும் இந்தியக் கல்வி உலகம் பாராட்டிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/85&oldid=788694" இலிருந்து மீள்விக்கப்பட்டது