பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முனனுரை நான் நிமிர்ந்து உட்கார்ந்து உங்களை நிமிர்ந்து நில்' என்று எழுதுகிறேன். துணிந்துதான் உங்களைத் தலைப் பின் தொடர்ச்சியாக, துணிந்து செல்' என்கிறேன். இந்த நூலுக்கு 'நிமிர்ந்து நில் துணிந்து செல்' என்று வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கிறேன். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும், உடலில் உறுதியும் இருந்தால்தானே நிமிர்ந்து நிற்க முடியும் செய்த தவறுகளுக்குத் தண்டனையாகத்தானே கூனிக்குறுகி, மெலிந்து வளைந்து போகிறோம். தவறுகள் உள்ளத்தாலும் நிகழலாம். உடலாலும் நிகழலாமல்லவா! உடலும், உள்ளமும், தவறுகளை, குற்றங் குறைகளைத் தவிர்த்து விடுமேயானால் தண்டனையேன் கிடைக்கப் போகிறது. அத்தகு சிறந்த வாழ்வு வாழ்வதற்கு, தம்மைத்தாமே செம்மைப்படுத்திக் கொள்வதற்கு, இந்த நூலிலே எடுத்துக் கூறியிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு முற்றிலும் முன்வந்து உதவி நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக உண்டு. நிமிர்ந்து நிற்பதற்கே திறன் வேண்டும். உடல்பலம் வேண்டும் என்றால் துணிந்து செல்வதற்குங் கூடத் துணிவு வேண்டுமல்லவா? ஒருவனைச் சுட்டிக்காட்டி, "வேலைப்பளு பாவம், அவனால் நிமிரவே முடியவில்லை' - என்கிறார்கள். வேறு ஒருவனைப் பார்த்து, 'வெற்றிவாகை சூடிவிட்டான். அதுதான் அவன் நிமிர்ந்து நிற்கிறான்' என்கிறார்கள். - வேலைகளைப் பளுவாகக் கருதாமல் திறமையோடு செய்து முடிப்பதற்கும், வெற்றியை எட்டிப் பறிப்பதற்கும், வலுவான உடல் வாகு வேண்டும். வலுவான உடல் வாய்க்கப் பெற்றிருந்தால்தான் என்றும் நிமிர்ந்து நிற்க முடியும். எதையும் துணிந்து செய்ய முடியும். 'எத்தனையோ வேலைகள் எல்லாவற்றையும் நான் ஒருவனே முதுகிலே சுமக்கிறேன்" என்பார்கள். சுமப்பது என்பது கழுதை, ஒட்டகம், யானை, குதிரை போன்ற மிருகங்களுக்குரியது. ஏனெனில் அவைகளின் முதுகெலும்புகள் இயற்கையாகவே வளைந்து அவ்வாறு அமைந்து இருக்கின்றன. வலுவான முதுகெலும்பு உள்ள மனிதனும் சுமக்கிறான். முதுகில் அல்ல; தலையால்,