பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா குறியாக இருப்பார். நேரம் ஆக ஆக டென்ஷன் ஆகிவிடுவார். செய்கிற வேலையில் கவனம் மாறி, சுற்றியிருப்பவர்களிடமும் சுமுகமாகப் பேசமுடியாமல் ஆகிவிடுவார். . அந்த அம்மையாரோ ஆறு மணி ஆனவுடன் வீட்டு வாசலிலேயே வந்து நிற்பார். நேரம் ஆக ஆக, அந்த அம்மாளும் டென்ஷன் ஆகிவிடுவார். அதிகநேரம் ஆகிவிட்டாலோ அந்த அம்மாள் பத்ரகாளியாக, இவரோ பக்தனாக மாறிக் கெஞ்ச, இப்படி அவர் வாழ்க்கை வீணாகிப் போனது. அவரது திறமையும் அழிந்துபோனது. அவரது மனைவியால் அவருக்கு அதிக டென்ஷன். ஒருநாள் மாரடைப் பால் அவர் மரணமடைந்து போனார், இளம் வயதிலேதான் அவர் இறந்துபோனார். அவரது திறமையை வெளிப்படுத்த முடியாமலே அவரது உறவு இழுத்து அழித்துவிட்டது. இருந்த கணவரை எப்போது திரும்புவீர்கள் என்று கேட்டுக் கேட்டுத் தொந்தரவு செய்து துன்பப்படுத்திய அவரது துணைவியால், இறந்த கணவரைப் பார்த்து எப்போது திரும்புவீர்கள் என்று கேட்டுக் கேட்டு அழத்தான் முடிந்தது! உயிரோடு இருந்தபோது, கொஞ்சம் உரிமை கொடுத்து, அவரைக் கொஞ்சம் உற்சாகப் படுத்தி, வெளியே போய் வேலை செய்ய விட்டிருந்தால், அவர் தன் திறமையை வளர்த்துக் கொண்டிருப்பார். வருமானத்தையும் அதிகப்படுத்திக்கொண்டிருப்பார்.