பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 53 பிறரிடையே பேரும் புகழும் பெற்றிருப்பார். இறந்த பொழுதும் மற்றவர்களின் நினைவில் வாழ்கின்ற மகிமையும் மரியாதையையும் பெற்றிருப்பார். ஆனால், வீணாகிவிட்டதே! இப்படித்தான், உறவுகள், ஒருவரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, பின்னிப் பிணைந்து கொண்டு, திறமையை வளர்க்கவிடாமல் அழுத்திக்கொண்டுவிடும். இவற்றிலிருந்து விடுபடவேண்டும். இதற்காக, நான் பந்தபாசம், சொந்தம் சுகம் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிடவேண்டும் என்று சொல்வதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. நீராடப் போகலாம், ஆனால் நீரோடுபோய் விடக் கூடாது. என்பதுபோல; உறவில் மகிழலாம் ஆனால் உறவுக் குள்ளே அமிழ்ந்து உருக்குலைந்து, உருவே இல்லாமல் போய்விடக்கூடாது என்றுதான் சொல்கிறேன். உறவுகளையும் இணைத்துக்கொண்டு, திறமை களையும் நினைத்துக் கொண்டு, வளர்த்துக்கொண்டு, வாழ்வது என்பதுதான் ஒரு பெரியகலை. இந்தக் கலையில் தேர்ந்தவர்கள்தான், பிறர் போற்றுகிற பெருமைக்கு ஆளானவர்களாகத் திகழ்கின்றார்கள். இந்த நிலையை வளர்த்துக்கொள்ள யார் உனக்கு உதவுவார்கள்? 'என்றும் நீயே துணை-உனக்கு இதுவே அனுபவக் கணக்கு."