பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா துணிந்து செல் என்பது உங்களைத் தூண்டிவிடு வதற்காக எழுதப்பட்ட சொல் அல்ல. உங்களுடைய உள்மனதிலே இருக்கிற உறுதியை வெளியுலகத்திற்குக் காட்டுவதற்காக, வீர உணர்வுகளை வழங்குவதாகும். கோழை ஒருவன் தினம் பயந்து, பயந்து சாகிறான். (Cowards die many times in a day.) sy6rm60, 68rsit ஒருவன் வெற்றியின் வெளிச்சத்திலே உலாவருகிறான். அவன் மனம் தெளிவாய் மட்டுமல்ல. வலிவாகவும் இருக்கிறது. மனதிலே வலிவாக இருப்பவர்களுடைய வாழ்க்கை தான் சரித்திரம் படைக்கிறது. கட்டப் பொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலே ஒரு கோட்டையைக் கட்டினானே! அதனுடைய பின்னணி உங்களுக்குத் தெரியும். காட்டிற்கு வேட்டையாட வந்த ஏழு வேட்டை நாய்கள் ஒரு முயலைத் துரத்திக் கொண்டு வருகின்றன. உயிருக்கு பயந்து ஓடி வந்த ஒரு சிறு முயலானது, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தது. ஏழு வேட்டை நாய்களையும் எதிர்த்து நின்றது. கோபமான பார்வையை யும், கொடூரமான எதிர்ப்புச் சத்தத்தையும் கேட்ட நாய்கள் நாலடி பின் வாங்கி நகர்ந்தன. இந்த வீர நிகழ்ச்சியைப் பார்த்த மன்னன் அங்கே ஒரு கோட்டையைக் கட்டினான். அதுதான் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை. விவேகானந்தர் வாழ்க்கையிலே ஒரு நிகழ்ச்சி. அவர் காட்டிலே தன்னந் தனியனாக வந்து கொண்டு இருக்கிறார். அவரைப் பத்துப் பன்னிரண்டு குரங்குகள் சேர்ந்து கொண்டு விரட்டுகின்றன. அவற்றின் வெறித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விவேகானந்தர் வேகமாக நடக்கிறார். குரங்குகளும் கடுமையாகப் பின்