பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 7 4 நாம் இந்த உலகத்தை மாயா உலகம் என்றோம். இந்த உலகத்தில் உள்ள எல்லாமே பூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் இருந்து கொண்டே இவைகள் எல்லா உயிர்களையும் வரவேற்று, வாழ வைத்து வழியையும் பறித்துக் கொண்டு இருக்கின்றன. அத்தகையவையே பூதங்களாகின்றன. பூதங்கள் என்றால் இறந்த காலத்தில் இருந்து கொண்டும், எதிர்காலத்தில் வாழ்கின்ற வலிமையும் பெற்ற, காற்று, தண்ணிர், நெருப்பு, நிலம், வானம் என்பனவே. - பூதங்கள் மட்டும்தான் இயற்கையோடு இயற்கை யாக வாழுமே தவிர, பூமியிலே பிறக்கின்ற மனிதர்கள், வந்து இருந்து, நலிந்து, இறந்து போவார்கள். வாழ்க்கையிலே கொஞ்சகாலம் கிளர்ந்து இருப்பார்கள். மலர்ந்து தோன்றுவார்கள். ஒளிர்ந்து விளங்குவார்கள். ஆனால் இதய உணர்வுகளால் அதிர்ந்து, அதிர்ந்து, இரத்த அணுக்களால் முதிர்ந்து, முதிர்ந்து, நோய்களாலும், நொடிகளாலும் நலிந்து, நலிந்து கடைசியில் இயலாமையால் உதிர்ந்து போகிறார்கள். ஆக, இருக்கும் காலம் வரை துணிந்து நிற்கவேண்டியது தான் உனது கடமையே தவிர, சோர்ந்துபோவது அவன் ஜீவிய ஆற்றலைக் குறைக்கும். ’துணிந்து நில் என்று சொன்ன உடனேயே நரம்புகள் புடைத்து எழுகின்றன. தங்கு தடையில்லாத இரத்த ஓட்டம் ஜீவநதிபோலத் தேகத்தில் பிரவேசிக் கிறது. கிளர்ஈரல் உண்டாகிறது. கெட்டிக்காரத்தனமான ஜீரணமண்டலம், தங்களது கடமைகளைத் தனித்துவம் மிக்கதாகச் செய்து முடிக்கிறது. கழிவுகளை