பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 75 வெளியேற்றும் உறுப்புக்கள் கட்டுப்பாட்டோடு பணியாற்றுகின்றன. கழிவு நீங்கியவுடன் கலகலப்பாக மாறுகிறது. துணிந்து செல்' என்று சொன்னவுடனே, இவ்வளவு, மாற்றங்களும், ஏற்றங்களும் நடைபெறு கின்றன. ஆகவே நிமிர்ந்து நில்லுங்கள் துணிந்து செல்லுங்கள் என்று உங்களை அழைக்கிறேன். எரிகின்ற அகல் விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் அவசியம் என் பார்கள். தங்கள் வாழ்க்கையில் நிறைவு அடையும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் சொல்லிவைக்கிறேன். நல்லதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு செயல் படுங்கள். நாளைய உலகம் நம்கையில், நம் வாழ்வும், வளமும் நம் செயலென்றே நம்புங்கள். நம்பிக்கை என்பது கற்பனையில் கட்டப்பட்ட வீடுபோன்றது அல்ல. நம்பிக்கை என்பது நஞ்சை நிலத்திலே தெளிக்கப்பட்ட விதைபோலும், பாறையில் கட்டப்பட்ட வீடு எந்தப் புயலுக்கும் அஞ்சாதது போன்றதாகும். வஞ்சப் பேய்கள் வளர்ந்து வந்து இதைக் சாய்க்க முடியாது. அதுபோல துணிவான நெஞ்சுக்குள்ளே தோன்றுகிறவைகள் துயரைத்தராது. தொடர்ந்து மேன்மையை உண்டாக்கும். ஆகவே துணிந்து செல்லுங்கள். உங்களால் முடிந்ததுக்கேற்ப முயற்சி செய்யுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். வெற்றியோ, தோல்வியோ தெரியும் வரை உங்கள் முயற்சி விமரிசையாகத் தொடரட்டும். வெற்றியின் வெளிச்சம் உங்களை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைக்கும்.