பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 9. நிலைத்து நில் கோடிக்கணக்கான ஜீவன்கள் கூடிக்களிக்கும் இந்த உலகில், கூட்டம் கூட்டமாக விலங்கினங்கள். கும்பல் கும் பலாக மனிதக் கூட்டங்கள். எல்லாமே எண்ணிக்கையில் கோடிகளைத் தாண்டிவிட்டன. பல ஜீவன்கள் பிறந்ததும் தெரியாமல் வாழ்ந்து, வளர்ந்து மடிந்து போகின்றன. சில ஜீவன்கள் மதியீனத்துக்கு உட்பட்டு மடிந்து மறைகின்றன. உலகத்தில் வாழ்வதற்கு மட்டுமின்றி, உலகத்தை ஆள்வதற்கும் உத்தரவு வாங்கிக் கொண்டு பிறந்தவர்கள் போல மனிதர்கள் வாழ்கிறார்கள். என்றாலும் இந்த உலக வாழ்க்கையைப் பார்த்து மலைத்துப் போய் நிற்கிறார்கள். இளைத்துக் காணப்படுகிறார்கள். களைத்துத்தான் வாழ்கிறார்கள். ஏன் இப்படி இவர்கள் தடுமாறுகிறார்கள். தடம் மாறிப் போவதாலா? தட்டுக்கெட்டுத் திரிவதாலா? இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழாததாலா? ஒருவரால் நிலைத்து நிற்க முடியவில்லையே ஏன்? மனிதரது குறிக்கோளே வாழ்க்கையில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதுதானே! ஏன் நம்மவர்களால் வாழமுடியவில்லை! கோடி, கோடியாய்க் கூடிவாழ்ந்தும், ஒருவரிடமிருந்து ஒருவர் பாடம் பெற்றும், ஒருவர்க் காவது, உணர்ச்சி பூர்வமான எழுச்சி ஏற்படவில்லையே. - ஏன்? வாழும் முறையில் ஏதோ குறையிருக்கிறது என்று தானே அர்த்தம். மக்களை நாம் நான்கு வகையாகப் பிரிக்கலாம்.