பக்கம்:நிலாப்பாட்டி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறகு, அரசன், அந்தக் குருவி எங்கிருந்து தங்கக் காசு கொண்டுவருகிறது என்று கண்டு பிடிக்க வேண்டுமென்று நினைத்தான். அதற்காக மிகவும் திறமைசாலிகளான சில பேரை அவன் பொறுக்கி எடுத்தான். அந்தக் குருவி காலையில் எழுந்தவுடன் எங்கெல்லாம் போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக, அதன் பின்னால் எப்படி யாவது தொடர்ந்து சென்று கவனிக்கும்படி ஏற்பாடு செய்தான்.

அந்த ஊரைச் சேர்ந்த கோட்டைச்சுவர் மிகப்பழமையானது. அரசனுடைய முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாலே அதைக் கட்டியிருந்தார்கள். அந்தக் கோட்டையின் சுவரிலே, எங்கோ ஒரு பக்கத்தில், சிறிதாயிருந்த ஒரு பொந்துக்குள் அந்தக் குருவி நுழைவதையும், அப்படி நுழைந்துவிட்டு வெளியில் வரும்போது தங்கக்காசு ஒன்றை மூக்கில் வைத்திருப்பதையும் ஒருவன் மூன்று நாட்களிலே கண்டுபிடித்து விட்டான். அவன் அதை உடனே அரசனுக்குத் தெரிவித்தான். அரசனுக்கு ஆச்சரியம் மேலும் அதிகமாகிவிட்டது. பல பேர் அவனிடம் கூறியிருந்த ஒரு செய்தியும் அவனுடைய நினைவுக்கு அந்தச் சமயத்தில் திடீரென்று வந்தது. அதனால் அவன் அந்த மதில் சுவரைப் பரிசோதிக்க ஆட்களோடு விரைந்து சென்றான். வேலைக்காரர்களை விட்டு அந்தப் பொந்திருந்த இடத்திலே சவரை இடிக்கும்படி உத்தரவு கொடுத்தான்.

வேலைக்காரர்கள் அப்படியே இடித்தார்கள். அதற்குள்ளே, ஒரு பித்தளை அண்டாவிலே நிறையத் தங்கக் காசும் தங்க நகை

22