பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்திருந்தார். எனது இரண்டாவது அண்ணன் பிறப்பதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முந்தி அந்த அண்ணனின் அம்மா சண்முகவடிவு குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயே இறந்து போனாள். கைக்குழந்தையை வளர்த்துப் பெரியவனாக்குவதற்காக என் தந்தை தெற்குக் கார்சேரி ஊரைச் சேர்ந்த மகமாயி அம்மாளை திருமணம் செய்துகொண்டார். எங்கள் அம்மா அப்பாவுக்கு மூன்றாம் தாரம் அவருடைய முதல் தாரமான கல்யாணி அம்மாளுக்கு குழந்தை பிறக்கவில்லை. குழந்தை தான் இல்லையே என்ற எண்ணத்தில் அந்த அம்மாள் தாம் தூம் என்று செலவு செய்து நெய்யில் மிதந்த அப்பம் ஆக பெரும் வாழ்வு வாழ்ந்து சீக்கிரமே செத்துப் போனாள். அதற்குப் பிறகு அப்பா, கிடாரக்குளம் ஊரைச் சேர்ந்த சண்முகவடிவு அம்மாளை திருமணம் செய்து கொண்டார். வெகுகாலம் வரை பெண்களின் பெயருக்குப் பின்னால் 'அம்மாள்' என்ற அடைமொழி கொடுப்பது வழக்கமாக இருந்தது. கால ஓட்டத்தில், 1940களுக்குப் பிறகு என்று சொல்லலாம், பெண்கள் பெயருக்குப் பின்னால் ஒட்டுச் சொல்லாக இருந்த அம்மாள் கைவிடப்பட்டது. வெறுமனே பெயர்களை மட்டும் சொல்வது வழக்கத்துக்கு வந்தது. சண்முகவடிவு அம்மாளுக்குப் பிறந்த ஆண்குழந்தைக்கு, அந்நாளைய மரபுப்படி, பெரியம்மையின் (அப்பாவின் முதல் மனைவியின்) பெயரான கல்யாணி என்பது சூட்டப்பெற்றது. கல்யாண கந்தரம் என்று. - - அந்தக் குழந்தையை எங்கள் அம்மா, தன் சொந்தப் பிள்ளை போலவே, கருத்தாக வளர்த்தாள். அண்ணன் சிறிது வளர்ந்து பெரியவனானதும், அம்மாச்சி (சண்முகவடிவின் தாய்) வீட்டில் வளரச்சென்றான். சண்முகவடிவு அம்மாளுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். தாய்மாமன்மாரும் அண்ணனை பிரியத்துடன் கவனித்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே திருநெல்வேலியில் வசித்தார்கள். எனக்கு ஒரு வயது நிறைந்த போது என் அப்பா இடமாற்றம் பெற்று துரத்துக்குடி சேர்ந்தார். துரத்துக்குடியில் வசித்த போது - எனக்கு ஒன்றரை வயது இருக்கும் - என் விலாவில் பெரிய கட்டி வந்து நிலைபெற்ற நினைவுகள் 3; 13