பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை. நல்ல பெயர் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் மிகுந்த சிரத்தை எடுத்துக் கற்பித்தார். மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், கேட்டுத் தெளிவுபெறும்படி தூண்டினார். ஒருநாள் பெரிய கணக்கொன்றை விளக்கி, கரும்பலகை முழுவதும் எண்களை எழுதி நிரப்பி, பாடம் நடத்தினார். இந்தக் கணக்கு எல்லோருக்கும் புரிந்திருக்கும்னு நினைக்கிறேன் என்று லோகாச்சாரி திருப்தியுடன் சொன்னார். மகாராஜன் எழுந்து நின்று, எனக்குப் புரியலே சார் என்றான். ஏன் புரியலே, தெளிவா விளக்கமாகச் சொல்லி கணக்கைப் போட்டுக் காட்டினேனே... பரவால்லே, இப்ப கவனி என்று கூறி ஆசிரியர் மீண்டும் ஆரம்பம் முதல் கணக்கை, அதை செய்ய வேண்டிய வழிமுறையை, நிதானமாக எடுத்துச் சொன்னார். இப்ப புரியுதா என்று அவனைக் கேட்டார். இப்பவும் புரியலே சார். இந்தக் கணக்கு எனக்கு விளங்கலே சார் என்று மகாராஜன் சொன்னான். லோகாச்சாரி கரும்பலகையை நிரப்பிஇருந்த எண்களையே பார்த்தபடி நின்றார். அவரது கண்கள் கலங்கின. கண்களிலிருந்து நீர் வடியத் தொடங்கியது. மாணவர்களுக்கு அந்த இளம் புதிய கணக்கு வாத்தியாரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. மகாராஜனுக்கும் அவர் மீது அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஸாரி சார் என்று கூறியபடி அவன் தன் இடத்தில் அமர்ந்தான். லோகாச்சாரி தலை கவிழ்ந்தவாறே நின்றார். அந்தப் பீரியட்' முடிந்ததற்கான மணி ஒசையிட்டது. அவர் வேகமாக வெளியேறினார். அதன் பிறகும் லோகாச்சாரி தான் கணக்கு வகுப்பு எடுத்தார். பொறுப்புடனும் திறமையோடும் பாடம் கற்பித்தார். மகாராஜன் மறுபடி தன் குணத்தைக் காட்டவேயில்லை. இவ்வாறு வாத்தியாரை மட்டம் தட்ட வேண்டும், ஆசிரியருக்கே பாடம் கற்பிக்க வேண்டும், கோட்டா பண்ணணும் என்று தீர்மானித்துத் திட்டமிட்டு செயல்புரிந்து தங்கள் செயலில் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் மாணவர்கள் வேறு வகுப்புகளிலும் இருந்தார்கள். நிலைபெற்ற நினைவுகள் 3 149