பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் வீட்டைக் காலிபண்ணிவிட்டு, அதை ஒட்டிப் பின்னாடியே, முடுக்கினுள் ஒதுங்கியிருந்த ராமசாமி பிள்ளை காம்பவுண்ட் வீட்டுக்குக் குடிபுகுந்தோம் வளைவில் முதலாவதாக இருந்த சிறுவிடு. ஒரே அறை. அதை ஒட்டிய அடுப்படி ஆனால் சவுகரியமான மச்சு இருந்தது. மத்தி வீட்டில் ராமசாமிபிள்ளை - வயது முதிர்ந்தவர், அவர் மனைவி உலகம்மாள்- அவ்வளவாக வயதாகாதவள். அவளின் சிறுமகள், ஆகிய மூவர் வசித்தனர். இறந்துபோன மூத்த மனைவியின் மகன் சென்னையில் ஏதோ வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். மூன்றாவதான வடக்கு வீட்டில் ஒரு குடும்பம் அதைச் சேர்ந்தவள் தான், செல்லம்மாளின் தோழியான சிவகாமி. வீட்டு மருமகள் அவள் கணவன் ஆறுமுகம் கொக்கிரகுளம் கோர்ட்டில் பணிபுரிந்தான். சைக்கிளில் போய் வருவான். அவன் தாய், திருமணமாகாத தங்கை மற்றும் கல்யாணமான ஒரு தங்கையும் இருந்தார்கள். தங்கையின் கணவன் துரத்து நகரம் ஒன்றில் உத்தியோகம் பார்த்தவன். விரைவில் வந்து அவளை அழைத்துப் போய்விடுவான் என்று சொல்லப்பட்டது. அந்தத் தங்கையின் பெயர் கல்யாணி தினம் தன்னை அழகு படுத்திக் கொள்வதில் இயல்பான ஆர்வம் கொண்டவள். குளித்து சுத்தமாக நல்ல புடவை உடுத்தி, தலைமுடியை சீவிச் சிங்காரித்து அழகாக இருப்பதில் தனி ஆனந்தம் அனுபவித்தாள் அவள். இப்படி இருந்தவள் ஒருநாள் அவசரம் அவசரமாகத் தனது சிங்காரிப்புகளை தானே குலைத்துக் கொண்டாள். சீவி முடித்துப் பூவைத்திருந்த கூந்தலை அவிழ்த்து உதறி வெறும் கொண்டை போட்டுக் கொண்டாள். உடுத்தியிருந்த பளிச் வர்ணப் புடவையைப் போக்கி, சாதாரண கைத்தறிப் பழைய புடவை ஒன்றைக் கட்டிக் கொண்டாள். அவளது இந்தச் செயலுக்குக் காரணம் பிறகு தான் புரிந்தது. அவள் கணவன் வந்து சேர்ந்தான். முசுடு அவன் என்று தெரிந்தது. சந்தேகப் பேர்வழி, மனைவி நல்ல சேலை கட்டிக் கொண்டு, சீவிச் சிங்காரித்து பளிச்சென்று விளங்கினால், யாருக்காக அவள் இதை எல்லாம் செய்கிறாள் என்று சந்தேகிப்பவன் அவன். அதற்காக அவளைக் கோபித்துச் சண்டைபோடுவதோடு, அடிகொடுக்கவும் தயங்காதவன். கணவனுடைய கல்யாண குணங்களை கல்யாணி பின்னர் மற்றவர் களுக்கு எடுத்துச் சொன்னாள். 158 இல் வல்லிக்கண்ணன்