பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு இடத்தில் அவ்வாறு செய்து, பக்தர்கள் சிலையை வரவேற்று மகிழவும், இன்னும் சில இடங்களிலும் நடராஜர் சில அமைத்தால், தானாகக் கோயில்கள் ஏற்பட்டுவிடும் என்று அவர் கருதினார். அவ்வாறே கட்டாரிமங்கலம், கரிசூழ்ந்தமங்கலம் கருவேலங்குளம், செப்பறை ஆகிய இடங்களில் அவர் வெற்றிகரமாகச் சிலைகள் செய்து நிறுத்தினார். மேலும் ஒரு இடம் சேர்ந்தார். ஒரு ஆசாமி இப்படி ஊர் ஊராகச் சென்று, நடராஜர் உருவம் செய்து நிறுத்தி விட்டுப் போவதை சிலர் சந்தேகக் கண்ணோடு பார்த்தனர். இது ஊருக்கு நல்லதல்ல; இதனால் தீமைகள் விளையலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஏன்இப்படிச் செய்கிறாய் என்ற கேள்விக்கு என் மனசுக்குத் தோன்றியது, செய்கிறேன். இது எனக்கு ஆத்மதிருப்தி அளிக்கிறது என்று சிற்பி பதில் சொன்னார். சந்தேகவாதிகளுக்கு அது பிடிக்கவில்லை. இந்த ஊரில் நடராஜர் சிலை செய்து நிறுத்தக்கூடாது; ஆடிக்கொண்டே இருக்கிற சாமியினால் ஊருக்குக் கேடு தான் ஏற்படும். குடிபடைகளே ஆடி அலைக்கழிந்து போவார்கள்; அதனாலே நீ உருவம் செய்யக்கூடாது என்று மிரட்டினார்கள். சிற்பி அஞ்சவில்லை. நடராஜர் சிலை வார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அதனால் ஆத்திரம் அடைந்த சந்தேகவாதி களில் ஒருவன் அவரது வலது கையை அரிவாளால் வெட்டி வீழ்த்தினான். எல்லோரும் ஓடிவிட்டார்கள். சிற்பி தயங்கவில்லை. முழங்கை தான் வெட்டுப்பட்டிருந்தது. சில பச்சிலைகளைத் தேடிக்கண்டு, அவற்றை வெட்டுப்பட்ட இடத்தில் வைத்து சிகிச்சை செய்தார். எஞ்சியிருந்த கையின் மேல்பகுதியில் வலி மறைந்ததும், அங்கு ஒரு அகப்பையைக் கட்டிக் கொண்டார். சிலை செய்வதற்கான ஏற்பாடுகளை மெது மெதுவாக முடித்து, முழங்கைக்குப் பதிலாகக் கட்டியிருந்த அகப்பையின் உதவியினாலேயே சிலையை வார்த்து முடித்தார். அவருடைய ஆற்றலினாலும் ஆன்மத்தவிப்பு காரணமாகவும் இந்தச் சிலை, அவர் செய்திருந்த இதர உருவங்களை விட வெகு சிறப்பாக அமைந்துவிட்டது. மூக்கும் முழியும் சிரித்த முகமுமாகக் காட்சி தந்த அந்த நடராஜர் திருஉருவம் சிற்பிக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் தந்தது. அவர், குழந்தைகளின் கன்னத்தை அன்பாகக் கிள்ளி விரல்களை முத்தமிட்டுக்கொள்வது போல, தனது நிலைபெற்ற நினைவுகள் 38 19