பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரூபாய் அனுப்பினேன். மீதம் ஐந்து ரூபாய் இருந்தது. அதை என்ன செய்வது என்று விளங்காத நிலையிலேயே அன்று நான் இருந்தேன். பல்பொடி, தலைக்குத் தேய்த்துக் கொள்ள எண்ணெய், கடிதம் எழுதத் தபால் கவர் இப்படி முக்கியமானவற்றை வாங்க ஒரு ரூபாய் போதுமானதாக இருந்தது. சாப்பாடு போக அதிகப் படியாக தின்பண்டம், மாலை டிபன் காபி என்று எந்த வழக்கம் அல்லது பழக்கமும் இருந்ததில்லை. பணத்தை என்ன செய்ய? படிப்பதற்கு கதைப்புத்தகம் வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அந்தச் சமயத்தில் தான் கல்கியின் கதைகள் தொகுக்கப் பெற்று கணையாழியின் கனவு என்ற புத்தகமாக வந்திருந்தது. அதை வாங்கத் தீர்மானித்தேன். அந்தப் புத்தகம் ஆனந்த விகடன் விற்பனையாளரிடம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பரமக்குடியில் விகடன் ஏஜன்ட் யார் என விசாரித்ததில், சப்ரிஜிஸ்ட் ரார் ஆபீசில் கிளார்க் வேலை பார்க்கும் அழகு சொக்குப் பிள்ளை என்பவர்தான் விகடன் விற்பனையாளர் என்று தெரியவந்தது. அந்த ஆபீசுக்குப் போய் அவரைப் பார்த்து, கணையாழியின் கனவு புத்தகத்தை விலைக்கு வாங்கினேன். வாரம் தோறும் விகடன் இதழ் கொண்டு தருவதற்கும் ஏற்பாடு செய்தேன். அதன் பிறகு அவருக்கு விற்பனைக்காக வருகிற புத்தகங்களை வாங்கக்கூடிய வாடிக்கையாளராக அவர் என்னை சேர்த்துக் கொண்டார். மைக்கேல் காலின்ஸ் - அயர்லாந்து சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் வரலாறு - போன்ற புத்தகங்களை அவரிடமிருந்து பெற்றேன். அலுவலக நேரம் காலை ஒன்பது முதல் மாலை ஐந்து மணி முடிய. நான் ஆபீசிலேயே தங்கியிருந்தேன். பக்கத்திலேயே சாப்பாடு ஒட்டல் மாலையில் ஐந்து மணிக்கு அப்புறம் நான் வெகுதூரம் நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். கிழக்கே ராமநாதபுரம் போகும் ரயில் தண்டவாளம் ஒரமாக நடந்தேன். சிலநாள் முதுகுளத்தூர் ரோடில் நடந்து போய் திரும்பினேன். ஆற்றில் மணல் படுகையில் மேற்கே பல மைல்துாரம் நடந்தேன் சிலதினங்களில், 19டு 3: வல்லிக்கண்ணன்