பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதிய ஆழம் இருக்கும். ஒரு பள்ளத்திலிருந்து மற்றொன்றுக்கு தண்ணிர் ஒடக்கூடியதன்மையில் கால்கள் வெட்டப்பட்டிருக்கும். அது தான் ஒடுகால்: முதலில், மூன்றாவது பள்ளத்தில் இருந்து வாளியில் தண்ணிர் எடுத்து வேட்டிதுணிகளை நனைத்துப் பிழியவேண்டும் இரண்டாவது பள்ளத்தில் குளிக்க வேண்டும். உடம்பைத் தேய்த்துக் குளிக்கலாம். சோப்பு போடுவது என்றால், வாளியில் தண்ணிர் எடுத்து வந்து கரையில் சற்று தள்ளி நின்று தேய்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீரால் சோப்பு நுரையைக் கழுவிப் போக்கிய பிறகு பள்ளத்தில் இறங்கி முங்கு போடலாம் இரண்டாவது பள்ளத்தில் திருப்தியாகக் குளித்த பிறகு, முதல் பள்ளத்தில் இறங்கி அவசரமாக முழுக்குப் போட்டுவிட்டு உடனடியாகக் கரையேறிவிட வேண்டும். எல்லாம் ஒழுங்காக முறைப்படி நடக்கும்படியும் தண்ணிரை யாரும் அசுத்தமாக்கிவிடாதபடியும் பொதுநலப் பணிபுரியும் இயல்பு பெற்ற பெரியவர்கள் கவனித்துக்கொள்வார்கள். ஒடுகாலில் குளிக்கிறவர்கள் காசு கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. ஆயினும் காசு கொடுக்க மனமுள்ளவர்கள் தருகிற காசை வாங்கிக்கொள்வார்கள். அப்படிக் கொடுக்கிற காசை எவர் கையிலும் தரவேண்டாம் ஒடுகால் அருகிலேயே மணலில் சிறிதாக பள்ளம் பறித்துவைத்திருப்பார்கள். அதில் காலணா, ஒரு அணா என்று காசுகள் கிடக்கும். குளித்து முடித்தவர்கள் போகிற போது அதில் அவரவர் விருப்பம் போல் காசுகள் போட்டுச் செல்லலாம். நாள் முடிவில், ஒடுகாலை பராமரிக்கிறவர்கள் அக் காசுகளை பங்கிட்டு எடுத்துக் கொள்வார்கள். ஆற்றுப் படுகையிலேயே மணல்பரப்பில் கிணறுகளும் இருந்தன. வாளியும் கயிறும் கொண்டு வருகிறவர்கள் கிணற்றில் நீர் மொண்டு குளித்து மகிழக் கூடிய வசதியும் இருந்தது. பரமக்குடி வாழ்க்கை அமைதியும் இனிமையும் நிறைந்ததாகவே இருந்தது. முதல் மாதம் சம்பளம் கிடைத்ததும் ரொம்ப சந்தோஷம் ஏற்பட்டது. பத்தொன்பது ரூபாய் தான் சம்பளம் என்றாலும், நான் வேலை பார்த்து அடைந்த முதலாவது சம்பளம் அது. சாப்பாடு ஒட்டலுக்கு ஒன்பது ரூபாய். ஊருக்கு வீட்டுக்கு ஐந்து நிலைபெற்ற நினைவுகள் : 189