பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பண்டுவம் பார்க்கிற சொர்ணம் ஐயா இங்கே வேலையிலே இருக்கிறதை கேள்விப்பட்டேன். அதனாலே பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன் என்று தயங்கித் தயங்கிப்பேசினார். தொடர்ந்து நான் மரியாதைப் பன்மையில் விளித்துப் பேசியது அவருக்கு சங்கட உணர்வையே ஏற்படுத்தியது. அதனால் அவர் உடனடியாக, ஐயா வாறேன். உடம்பை கவனிச்சுக்கிடுங்க என்று சொல்லி, கும்பிடுபோட்டு விட்டு வெளியேறினார். காலகாலமாக, தாழ்த்தப்பட்ட இனம், நீ தாழ்ந்தவன் என்று சொல்லி ஒதுக்கிவைத்து, தாழ்த்தித்தாழ்த்தியே பேசி இதர சமூகத்தினர் பழக்கப்படுத்திவிட்டதால், அப்படி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையினர் ரத்தத்திலேயே அந்த உணர்வு ஊறிப் போய்விட்டது. அவர்களும் தாழ்ந்து பணிவாக நடப்பதை இயல்பாகக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில், நீங்கள் - இருங்க என்ற தன்மையில் மரியாதை கொடுத்துப் பேசப்படுவதை அவர்களால் மனதாற அங்கீகரிக்க முடியாத நிலையே இருந்தது. சொர்ணம் பண்டிதருக்கும் தாழ்மை உணர்வு இருந்ததில் வியப்பில்லை. பூரீவைகுண்டம் விவசாய ஆபீசுக்கும் விவசாயிகள் எவரும் தேடி வந்து விதைகள், உரங்கள் போன்றவற்றை வாங்கியதில்லை. டிமான்ஸ்ட் ரேட்டர், மேஸ்திரி, மெசஞ்சர் ஆகியோர் தான் கிராமங்களுக்குப் போய் விவசாயிகளை சந்தித்து, தங்கள் கடமையை செய்துகொண்டிருந் தார்கள். டிமான்ஸ்ட்ரேட்டர் அந்தோணிப் பிள்ளை ஒன்றிரண்டு நாள்கள் சில கிராமங்களுக்குப் போய் விட்டு, நாலைந்து நாள்கள் கிராமங்களில் தங்கி விவசாயிகளை சந்தித்ததாக டயரி எழுதி மேலதிகாரிக்கு அனுப்பி விடுவார். அதனால் சேர்ந்தாற் போல் அநேக நாள்கள் அவர் ஆபீசுக்கு வரமாட்டார். வருகிற நாள்களிலும், நாள் முழுவதும் ஆபீசில் தங்க மாட்டார். சிலமணி நேரம் இருந்து விட்டுப் போய் விடுவார். மேஸ்திரி முத்துசாமி பிள்ளை முடித்தானேந்தல் (முடி வைத்தான் ஏந்தல்காரர். முதியவர். சர்வீஸ் அதிகமாகியிருந்தது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் பணிஓய்வு பெற ரிட்டையர் ஆக) வேண்டிய நிலையில் இருந்தவர். சுறுசுறுப்பு இல்லாமல் இயங்கக்கூடியவர். அவர் பலநாள்கள் வெளியூர்களிலேயே முகாமிட்டிருப்பார். நிலைபெற்ற நினைவுகள் 38 215