பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அந்தோணிப் பிள்ளை ஆபீசில் இருந்தபோது தபால் வந்தது. அன்று தபாலில் பத்திரிகைகளும் கடிதங்களும் எனக்கு வந்திருந்தன. உங்களுக்கே நிறையத் தபால்கள் வருதே என்று அவர் ஆச்சர்யப்பட்டார். ஏன் பத்திரிகைகள் எல்லாம் வருது என்று கேட்டார். நான் கதை, கட்டுரை எழுதுவது பற்றிச் சொன்னேன். பாரத சக்தியில் ஒரு கதையும் கட்டுரையும் வந்திருப்பதைக் காட்டினேன். அந்த இதழின் ஐந்து பிரதிகள் எனக்கு வந்திருந்தன. ஒரு பிரதி கொடுங்க படித்துப் பார்க்கிறேன் என்று அவர் கேட்டு வாங்கிக் கொண்டார். இரண்டு நாள்களுக்குப் பிறகு அந்தோணிப் பிள்ளை பேச்சோடு பேச்சாகச் சொன்னார்; பத்திரிகைகளிலே எழுதுறது தப்பில்லே. ஆனால் கவர்ண்மென்ட் செர்வன்ட்ஸ் ஆக இருக்கிறவங்க இப்படி எல்லாம் எழுதக் கூடாது. அப்படி எழுதணும்னு சொன்னால், மேலதிகாரிகிட்டே காட்டி பர்மிஷன் வாங்கணும். நீங்க பத்திரிகை களுக்கு எழுதுகிற போது, எழுதுறதை என் மூலமா மேலாபீசுக்கு - அசிஸ்டன்ட் டைரக்டர் ஆஃப் அக்ரிகல்சர் ஆபீசுக்கு - அனுப்பி பர்மிஷன் வாங்கியாகணும் இப்படி ஒவ்வொரு தடவையும் செய்யனும் கவர்ண்மென்ட் சர்வன்ட்ஸ் காண்டக்ட்ருல்சிலேயே இந்த விதி இருக்கு என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. காலம் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. நான் எப்போதும் போல் பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டேயிருந்தேன். நண்பர் சக்திதாசன் சுப்பிரமணியன் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதத்தில் நவசக்தியில் ஒருவாரம் என்னைப் பற்றி எழுதியிருந்தார். எனது எழுத்தாற்றல், உழைப்பு பற்றி எல்லாம் சொல்லி விட்டு இவர் இப்போது பூரீவைகுண்டத்தில் அரசாங்க அலுவலகம் ஒன்றில் குமாஸ்தாவாகப் பணிபுரிகிறார். அது ஒரு வட்டத் துளையில் ஒரு சதுர முளையை (எ ஸ்குவேர் ப்ளக் இன் எ ரவுண்ட் ஹோல்) வைத்திருப்பதுபோல, பொருத்தமற்றது ஆகும். இவர் சேர்ந்து பணிபுரிய வேண்டிய இடம் ஒரு பத்திரிகை அலுவலகம் தான் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த வாரம் ரீவைகுண்டம் கோட்டை ராமு பிள்ளை என்பவர் என்னை தேடிவந்தார். அவர் அடிக்கடி சென்னை சென்று வருவது 218 கிே வல்லிக்கண்ணன்