பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கமாம் அண்மையில் அவர் சென்னைக்குப் போன போது திருவிக அவர்களை பார்ப்பதற்காக நவசக்தி அலுவலகம் சென்றாராம் அங்கே சக்திதாசன் சுப்பிரமணியன் என்னைப் பற்றி விசாரித்தாராம். ரொம்ப உயர்வாகச் சொன்னாராம். இப்போது நவசக்தியில் அவர் எழுதி யிருப்பதையும் படித்தாராம். அதனால், உள்ளூரிலேயே இருக்கிறவரை நாம பார்க்காமல் இருப்பது சரியில்லை என்று எண்ணித் தேடி வந்ததாகச் சொன்னார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். போனார். போகிற போது அவர் பக்கத்து வீட்டு வக்கீல் சுப்பையா முதலி யாரையும் கண்டு பேசிச் சென்றார். ராமு பிள்ளை போன சற்று நேரத்தில், சுப்பையா முதலியார் எட்டிப்பார்த்தார். ஆபீசை ஒட்டி இருந்த அடுத்த வீட்டில் தான் அவர் வசித்தார். நான் தினசரி அவரை பார்ப்பது உண்டு. நானாக என்னை அறிமுகம் செய்து கொண்டதில்லை. அவரும் என்னைப் பற்றி அக்கறை கொண்டதுமில்லை. இப்ப கோட்டை ராமு பிள்ளை வந்தவர் உங்களைப் பற்றி நிறையச் சொன்னார். சென்னை நவசக்தி ஆபீசிலே உங்களை பெருமையாகப் பேசிக்கொண்டதாகச் சொன்னார். நாம இங்கே பக்கத்திலே பக்கத்திலே இருக்கிறோம். இத்தனை காலமாக பேசிப்பழக முயற்சிக்கவே இல்லையே என்று வக்கீல் முதலியார் வருத்தப்பட்டார். இங்கே ஆபீசரா இருக்கிறவரு ஒரு மாதிரி. அதுனாலே தான் நான் உங்ககிட்டே விசாரிக்கலே, நீங்க கதை கட்டுரையெல்லாம் எழுதுறிங்க, நவசக்தியிலே உங்களைப் பற்றி சிறப்பா செய்தி வந்திருக்குன்னு கோட்டை ராமுபிள்ளை சொன்னாரு ராத்திரி நம்ம வீட்டுக்கு வாங்க பேசிக்கிட்டிருக்கலாம் என்றும் அவர் சொன்னார். அன்று இரவு வக்கீல் சுப்பையா முதலியாரை நான் அவர் வீட்டில் சந்தித்தேன். அவர் சதா எழுதிக்கொண்டேயிருப்பார். வழக்குகள் சம்பந்தமாக இருக்கும் என்று நான் எண்ணினேன். அப்படி இல்லை என்று தெரியவந்தது. பொதுவான பல விஷயங்கள் பற்றியும் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு நிறைய எழுதிவைத்திருக்கிறேன். ஆனால் எங்கேயும் அனுப்பியது கிடையாது என்று அவர் சொன்னார். அப்படியிருந்த பல கட்டுகளையும் காட்டினார். நிலைபெற்ற நினைவுகள் : 219