பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிவித்தார். மறவர்கள் ஒரு தொகையைக் கட்டிவிட்டு அவனை அழைத்துப் போனார்கள். மற்றொரு சமயம் ராஜவல்லிபுரத்தில், ஒரு வீட்டில் பிள்ளைமார் வீட்டில் தான் திருட்டு நடந்து விட்டது. ராத்திரி எவனோ வீட்டில் புகுந்து துணிமணிகளையும் பணம் வைத்திருந்த சிறு மரப்பெட்டியையும் கைப்பெட்டி என்று குறிப்பிடுவார்கள்) களவாடிச் சென்றுவிட்டான். அதிகாலையில் வீட்டுக்காரரும் அவர் மனைவியும் அப்பாவை தேடிவந்து முறையிட்டு அழுது புலம்பினார்கள். அப்போதும் அப்பா மறக்குடிப் பெரியவர்களை வரவழைத்து, விஷயத்தை சொல்லி, உத்திரவிட்டார். உங்களுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்காது. என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது, திருடு போன பொருள்கள் எல்லாம் வந்து சேரனும்: இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று என்னால் சொல்லமுடியாது என்று அப்பா கண்டிப்புக்குரலில் பேசினார். தேவமார் ஆள்கள் தலைகுனிந்தபடி போனார்கள். பத்து மணி சுமாருக்கு ஒரு ஆள் வந்தான். எசமான், மரப்பெட்டி ஒன்று வாய்க்கால் தண்ணீரில் ஆழமாக அமுக்கிவைக்கப்பட்டிருக்கு அது மேலே பாறாங்கல்லு ஒண்னு வைக்கப்பட்டிருக்குது என்று தெரிவித்தான். திருட்டு கொடுத்த வீட்டுக்காரரும் வந்தார். காணாமல் போன துணிகள் எல்லாம் கீழத்தெரு தோட்டத்திலே பாழ்ங்கிணறு பக்கத்திலே கிடந்ததாம். ஒரு ஆள் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான் என்று சொன்னார். அவரையும் கூட்டிக்கொண்டு, மற்றும் சிலபேர்களுடன் அப்பா வாய்க்கால் பக்கம் போனார். பையன்களும் வேடிக்கை பார்க்க உடன் சென்றார்கள். வாய்க்கால் சிறியது. வயல்களுக்கு தண்ணிர் பாய்வதற்காக அமைக்கப்பட்டது. பெரியகுளத்திலிருந்து தண்ணிர் அதன் வழியே ஒடிக்கொண்டிருக்கும். எப்பவாவது ஒன்றிருவர் அதில்குளிப்பார்கள். பொதுவாக வாய்க்கால் வெறிச்சிட்டுக் கிடக்கும். அதில் பெண்கள் குளிக்கக் கூடிய இடத்தில், ஒரு பள்ளத்தில் மரப்பெட்டி அமுக்கி, பாறாங்கல்லைத் தாங்கியபடி வைக்கப்பட்டிருந்தது. ஒருவர் நீரில் இறங்கி பெட்டியை எடுத்து வந்து தரைமீது வைத்தார். 64 38 வல்லிக்கண்ணன்