பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமையான, பளிர் வர்ணங்கள் கொண்ட படங்கள் அழகு செய்த காலண்டர்கள் மறக்கமுடியாதவை. கடவுளர் படங்கள், ராஜா ரவிவர்மா தீட்டிய ஒவியங்கள், சகுந்தலையும் மான்குட்டியும், தடாகத்தின் அருகே புல் தரைமீது ஒயிலாகப் படுத்தவாறு சகுந்தலை தாமரை இலை மீது கடிதம் எழுதும் பாவனை எனப் பலவாறான படங்கள் குளுமையான வர்ணங்களில் அழகாக அச்சிடப்பட்டு இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. வாசனை நிறைந்த சுந்தரி சோப், லயன் பிராண்ட் சோப் என்று குளிக்கும் சோப்புகள், அழகு அழகான அட்டைப் பெட்டிகளில், மூடி மீது கவர்ச்சிகரமான படங்களோடு, இங்கிலாந்திலிருந்து வந்தன. வினோலியா ஒயிட் ரோஸ் சோப் தரத்திலும் மணத்திலும் விசேஷமானது. மூன்று சோப்புகள் கொண்டநீளப் பெட்டியில் அவை கிடைத்தன. அட்டைப் பெட்டி பொன் வண்ணத்தோடு, தங்கத்தால் செய்யப்பட்டது போல், மினுமினுக்கும். பெட்டியின் மேலே இனிய தேவதைகளின் படம் மிளிரும். பிஸ்கட் தினுசுகளும் அயல்நாட்டுச் சரக்குகள் குறைந்த விலையில் கிடைத்துக் கொண்டிருந்தன. ஹன்ட்லி பால்மர்ஸ் பிஸ்கட் பிரசித்தி பெற்றது. ஒரு துண்டை நாவில் வைத்தால் தானாகக் கரைந்துவிடும் என்று சொல்லும்படியான மென்மைத்தன்மையும் இன்சுவையும் பெற்றிருந்த உயர்ரக பிஸ்கட் அது. தகரடப்பாவில், மினுங்கும் வர்ணங்களோடும் இனிய படங்களோடும், நைசான மிக லேசுக் காகிதத்தில் பொதியப்பட்டு, தனி மணத்தோடு வந்தது அந்த பிஸ்கட் உடுத்தும் துணிகளும் இங்கிலாந்திலிருந்து வாணிபப்பொருளாக வந்து குவிந்தன. மிக நைலான மல்வேட்டி (கிளாஸ்கோமல்)யும் மஸ்லின் சட்டைத் துணிகளும் மிகுதியாக வந்தன. அவற்றை அணிவதே நாகரிகம் பெருமை, மதிப்பு மிக்கது என்று ஜனங்களும் நம்பினார்கள். சிலுவைப்பிள்ளை சதா நைசான மல்வேட்டியிலும் வெள்ளைவெளே ரெனத் துலங்கிய மெல்லிய மஸ்லின் துணிச் சட்டையிலும்தான் காட்சி தந்தார். கோடை காலமோ, மழைகாலமோ, எப்போதும் அவர் குடை வைத்திருப்பார். கொழும்புக் குடை கொழும்புக் குடை உசத்தியானது, அந்தஸ்தின் சின்னம் என்று கருதப்பட்டுவந்தது அக்காலத்தில் மிடுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு திரிந்த மற்றொரு மனிதரும் அவ்வப்போது அப்பாவை பார்க்க வருவார். பண்ணைய நிலைபெற்ற நினைவுகள் 38 71