பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் நடந்துவந்த வாழ்க்கைப் பாதையைப் பற்றி வழியில் நீங்கள் கண்டறிந்தவை பற்றி, பார்த்த மனிதர்களைப் பற்றி எல்லாம் எழுதுங்கள். அவை முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள் ஆகும். அவற்றை நீங்கள் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று பலமுறை வலியுறுத்தினார்கள். அதனால், நான் எனக்கு எண்பதாவது வயது நிறைவுற்றதும் வாழ்க்கைச் சுவடுகள் என்ற பெயரில் என் மனப்பதிவுகளை எழுதினேன். அவை 2001இல் நூல்வடிவம் பெற்றன. அந்த நூல் நல்ல வரவேற்பையும் பெற்றது. எனினும் என் நண்பர்களில் முக்கியமான சிலருக்கு ஒரு மனக்குறை இருந்தது. நான் வாழ்ந்த காலத்தைப் பற்றியும், காலமும் நாட்டின் நிலைமைகளும் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் அவை பற்றிய என் கருத்துக்கள் குறித்தும் நான் விரிவாக எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தார்கள். எனவே மேலும் விரிவாக நான் என் வாழ்க்கைச் சரிதையை எழுத வேண்டும் என்று நண்பர்கள் கோரிக்கை விடுத்தவாறு இருந்தார்கள். எனது பிள்ளைப் பருவம், பள்ளிப்பருவம், உத்தியோக அனுபவங்கள் பற்றி எல்லாம் இதுவரை போதுமான அளவு சொல்லப்படவில்லை; அவற்றை விரிவாக எழுதவேண்டும் என்று சில நண்பர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். ஆனாலும் என் இயல்புப்படி நான் காலத்தை ஏலத்தில் விட்டவாறு என் கதையை எழுதாமலே இருந்தேன். என் அன்புச் சகோதரர் தி. க. சிவசங்கரன் என்னை அப்படி இருக்க விடவில்லை. வல்லிக்கண்ணன் அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதுகிறார்; நீங்கள் அதைக் கண்டிப்பாய் புத்தகமாகப் பிரசுரிக்க வேண்டும் என்று சந்தியா நடராஜன் அவர்களிடம் பேசி உறுதி செய்துவிட்டு எனக்குத் தெரிவித்தார். என்னிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டுள்ள நண்பர் கழனியூரனும் இவ்வகையில் துரண்டுதலாகச் செயலாற்றினார். ヘブ