பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 101 நாடோடிப் பாடல்களை சேகரிக்கும் பழக்கம் அந்நாள்களில் புதுசாகத் தமிழ்நாட்டில் தலைகாட்டியிருந்தது. # ... இந்தியாவிலிருந்து தேவேந்திர சத்யார்த்தி என்பவர் மாட்டு வண்டியிலேயே நாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பல்வேறு மொழிகளில் வழங்கி வந்த நாடோடிப் பாடல்களை சேகரித்தார். அவற்றை எல்லாம் எழுத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார். அவர் தமிழ் நாட்டுக்கும் வந்தார். அவரைப் பற்றிய கட்டுரைகள் பல பத்திரிகைகளிலும் வெளியாயின. அவர் தந்த உந்துதலில் தமிழ் நாட்டிலும் சிலர் நாட்டுப் புறப் பாடல்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டலானார்கள். மு.அருணாசலம் அவ்விதம் பாடல்கள் சேகரம் செய்தார். அவற்றை ஆதாரமாக்கிக் கட்டுரைகள் எழுதினார். பின்னர் அவற்றைத் தொகுத்து காற்றிலே மிதந்த கவிதை என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். சக்தி காரியாலய வெளியீடு அது. கி.வா. ஜகந்நாதனும் நாட்டுப் பாடல்களை சேகரித்தார். அவை பற்றி விரிவான கட்டுரைகள் எழுதினார். அப்படி அவர் சேகரம் செய்த பாட்டுக்களை ஒரு பெரிய பவுண்டு நோட்டில் எழுதி வைத்தார். பிறகு ஒரு சமயம் யாரோ அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அவ்வாறு எடுத்துச் சென்றவர் மனம் வருந்தி திரும்பக் கொண்டு வந்து அதைத் தம்மிடம் சேர்த்து விடுவார் என்று நம்புவதாக கி.வா.ஜ. குறிப்பிட்டு வந்தார். நம்பிக்கை தெரிவித்தும், எதிர்பார்த்தும், பத்திரிகைகளில் எழுதினார். ஆயினும், ஆசையோடு அந்தப் பெரிய நோட்டை அமுக்கிச் சென்றவர் மனம் மாறவில்லை, அவருடைய மனசாட்சி அவரை உறுத்தவில்லை போலும்: கா. பூர்.து.யையும் (காபூரீ.யூரீனிவாச ஆச்சார்யா) அவர் வீட்டிலேயே கண்டு பேசினோம். காண்டேகர் நாவல்களை ஒவ்வொன்றாக மொழிபெயர்த்து வெளியிட்டு அவர் கவனிப்பைப்பெற்று வந்த சமயம் அது. நாங்கள் கண்டேகர் நாவல்கள் பற்றிப் பேசி மகிழ்ந்தோம். காண்டேகரின் 'கருகிய மொட்டு என்ற நாவலின் தமிழாக்கம் வெளிவர இருப்பதாகவும், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் சொன்னார். - அந்த நாவல் தமிழ் நாட்டில் பரபரப்பு ஏற்படுத்தத்தான் செய்தது. இல்லற வாழ்வில், ஒத்த உணர்வுகள் கொண்ட ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இணைவதில்லை, பொருந்தா ஜோடிகளே திருமணம் மூலம் சேர்கின்றன. அவர்களுடைய