பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நிலைபெற்ற நினைவுகள் பாரதிதாசன் உவமைநயம் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப் பெற்று 1945ல் புத்தகமாக வெளிவந்தது. பாரதிதாசன் கவிதைகள் குறித்து வெளிவந்த முதல் புத்தகம் அது தான். பாரதிதாசன் கவிதைகளை ஆய்வுசெய்த பேராசிரியர் ஒருவர் இச் செய்தியைத் தமது ஆய்வில் பதிவு செய்திருக்கிறார். கிராம ஊழியன் ஆண்டு மலர் வேலைகள் அவசரமின்றி மெதுவாகவே நடைபெற்று வந்தன. அதற்கு புதுமைப்பித்தன் ஒரு கவிதை அனுப்பியிருந்தார். வேளுர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில் ஓடாதீர்!’ என அவர் எழுதியிருந்த கவிதை வேகமும் சுவையும் கொண்ட அருமையான படைப்பு, மறைந்த எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனுக்கு நிதி வசூல் முயற்சி நடந்து கொண்டிருந்த சமயம் எழுத்தாளன் வாழ்கிறபோது கவனிக்காமல் விட்டுவிட்டு, அவன் இறந்த பிறகு நிதி திரட்டுவது நினைவுச் சின்னம் வைப்பது என்று பெருமைப்படுத்துகிற காரியம் புதுமைப்பித்தனுக்குப் பிடிக்கவில்லை. அந்தப் போக்கைக் கண்டித்தும் நையாண்டி பண்ணியும் உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட நீண்ட கவிதை அது. ‘ஓடாதீர்’ கவிதை அச்சில் வருவதற்கு முன்னரே பரபரப்பான கவனிப்பைப் பெற்று விட்டது. அதற்குக் காரணம் திருலோக சீதாராம்தான். அதை அவர் மனப்பாடம் செய்து, போகிற இடங்களில் எல்லாம் அவருடை தனித்தன்மை வாய்ந்த குரலில் பாடிக்காட்டி, அனைவரையும் ரசிக்கச் செய்தார். கோயம்புத்துரில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்களின் முதலாவது மாநாட்டு மேடையிலும் அவர் அந்தப் பாட்டை எடுப்பாகப் பாடினார். 1944 இறுதியில் தமிழ் எழுத்தாளர்களின் முதலாவது மாநாடு, கோவை எழுத்தாளர்களான ஆர்.சண்முகசுந்தரம், ஆர். திருஞானசம்பந்தம் இருவரது தீவிர முயற்சியாலும், மற்றும் பலரது ஒத்துழைப்பாலும், கோயம்புத்துனரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவையில் வசித்த விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி. நாயுடு மாநாட்டின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். அவருடைய கோபால் பாக் என்ற மாளிகையில் தான் அம்மாநாடு நடந்தது. ஜி.டி. நாயுடு ஒரு விந்தை மனிதர். அவர் பரிசோதனைகள் செய்து, புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம், அற்புதமான பல ஆக்கங்களைப் படைத்தார். பப்பாளியில் மிக அதிகமான காய்களைப் பெரிது பெரிதாகக் காய்க்கச் செய்வது, தேய்வுறாமல் நீண்ட காலம் பயன்படக்கூடிய ரேஸர் பிளேட், மற்றும் புதிய