பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 133 இச்சந்தர்ப்பத்தில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபை திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தியது. புதிய நாடகங்களை அரங்கேற்றியது. நாரண துரைக்கண்ணன் எழுதிய 'உயிரோவியம்’, ப.நீலகண்டன் நாடகம் முள்ளில் ரோஜா', ஆதிமூலம் எழுதிய மனிதன், கி.ஆ.பெ.விசுவநாதம் மற்றும் ரா. வேங்கடாசலம் எழுதிய நாடகங்கள் என்று பல புதிதாக மேடை ஏற்றப்பட்டன. ஏற்கனவே அவர்களுக்குப் பெயர் வாங்கித் தந்திருந்த ஒளவையார், சிவலீலா முதலிய நாடகங்களும் நடிக்கப் பெற்றன. நடிகர் டி.கே. சண்முகம் நல்ல ரசிகர் இலக்கியங்களில் ஈடுபாடு உடையவர். பலரகமான நூல்களையும் விரும்பிப் படிக்கும் இயல்பினர். எழுத்தாளர்களின் நண்பர். அவர் எனது அன்புச் சகோதரர் ஆகியிருந்தார். அடிக்கடி சுவை நிறைந்த கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாடக மாற்றத்தின் போதும் அவர் எனக்குப் பணம் அனுப்பி புதிய நாடகத்தைக் கண்டு மகிழ்வதற்காக என்னை திருச்சிக்கு வரவழைப்பதை வழக்கமாக்கினார். நான் பார்த்த நாடகங்களைப் பற்றி ஊழியனில் விரிவான கட்டுரைகள் எழுதினேன். அவை வாசகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டன. டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகங்கள் பற்றி நான் கிராம ஊழியனில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியதால், நவாப் டி.எஸ். ராஜமாணிக்கமும் அவரது நாடகங்கள் குறித்து கட்டுரைகள் ஊழியனில் வரவேண்டும் என்று விரும்பினார். எனவே, நவாப் நாடகக் கம்பெனியான பூரீ தேவிபால விநோத நாடக சபை முகாமிட்டு நாடகங்கள் நடத்திய ஊர்களுக்கு வருமாறு அழைத்துப் பணமும் அனுப்பினார். அப்படி திருவனந்தபுரம், கொல்லம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு நவாபின் அழைப்பின் மீது போய், அவர் கம்பெனி நாடகங்களைக் கண்டு களித்தேன். அவை பற்றியும் ஊழியனில் கட்டுரைகள் எழுதினேன். கிராம ஊழியன் மாதமிருமுறை இதழ் விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதற்காக முக்கியமான பல ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆயினும் அதிகமான விற்பனை அதற்கு இருந்ததில்லை. சந்தாதாரர்களும் குறைந்த எண்ணிக்கையினரே இருந்தனர். ஆயிரம் பிரதிகளுக்குள்ளே தான் ஊழியன் அச்சாயிற்று. தரமான வாசகர்கள் ஊழியன் வருகையை