பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நிலைபெற்ற நினைவுகள் நடத்தியாக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். துறையூருக்கு என்னைத் தேடி வந்து எனது கருத்தைக் கேட்டார்கள். பணச்செலவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இளைஞர்களின் உற்சாகமான முயற்சியை நான் வரவேற்றேன். பாராட்டினேன். செய்ய வேண்டியது தான் என்று ஆதரித்தேன். வரவேற்புக் குழுவின் தலைவராக நான் இருக்க வேண்டும் என்றும், கையெழுத்துப் பத்திரிகைகளின் காட்சியில் எனது இதயஒலியும் இடம்பெற வேண்டும் என்றும் மரா.சுப்பிரமணியன் வேண்டினார். நானும் இசைவு தெரிவித்தேன். கையெழுத்துப் பத்திரிகையாளர் மாநாடு 1946ல் ரீரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. சென்னையிலிருந்து 'பாரத்தேவி நாளிதழ் ஆசிரியர் கே.அருணாசலமும், ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளர் நாடோடி வெங்கட்ராமனும் மாநாட்டுக்காக வந்திருந்தார்கள். - நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். ‘பாரததேவி அருணாசலம் தலைமை உரை, நாடோடி வாழ்த்துரை வழங்கினார்கள். நாகப்பட்டினம் வக்கீல் சூரியமூர்த்தி, மணிக்கொடி எழுத்தாளர்கள் ந.பிச்சமூர்த்தி, சிட்டி சுந்தரராஜன் மற்றும் சிலபேர் வாழ்த்திப் பேசினார்கள். மற்றொரு மணிக்கொடி எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவும் வந்திருந்தார். செல்லப்பா வத்தலக்குண்டிலிருந்து, நண்பர்களைப் பார்த்துப் பேசுவதற்காக, திருச்சிக்கு வந்திருந்தார். சிட்டியின் அழைப்பின் பேரில் அவரும் மாநாட்டுக்கு வந்தார். இளைஞர்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பாராட்டினார். மாநாடு பெரும் வெற்றி என மதிக்கப்பட்டது. ஐம்பதுக்கும் அதிகமான கையெழுத்து இதழ்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சென்னைப் பத்திரிகைகள் இந்த மாநாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகள் வெளியிட்டிருந்தன. இதயஒலி எனும் கையெழுத்து மாத இதழுடன், நான் நையாண்டி பாரதியாக காப்பி என்ற தினசரிக் கையெழுத்துப் பத்திரிகையையும் தயாரித்துவந்தேன். முழுநீளத்தாளில் (ஃபுல்ஸ்கேப் பேப்பர்) நான்கு பக்கங்கள் கொண்ட நாளிதழ் நையாண்டி பாரதியின் கிண்டல், குத்தல், சாடல்களே அதிகம் அதில் இடம் பெற்றன. முக்கியமான உள்ளூர் செய்திகளும் அவை