பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 39 நான் நிதானமாக நடந்தேன். வீட்டிலிருந்து பணம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் அவல் மட்டும் எடுத்துச் சிறு பொட்டலமாக்கிப் பைக்குள் வைத்திருந்தேன். வழிநெடுகப் பசுமையாக இருந்தது. அடிக்கடி மழை பெய்து ரோடு ஒரங்களில் தண்ணீர் தேங்கிக்கிடந்தது. - ரோடில் போக்குவரத்து அதிகமில்லை. எப்பவாவது ஒரு பஸ் வரும். கோபாலன் பஸ்’ வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என் மனம் சொன்னது. நான் சேவியர் ஹைஸ்கூலில் படித்த காலத்தில், ஏழாவது வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வரை கே. ராமசாமி என்றொரு மாணவன் என்னோடு படித்தான். என்னுடன் நண்பனாகப் பழகினான். அவன் கோபாலன் பஸ் சர்வீஸ் முதலாளியின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டு அவர் வீட்டோடு வசித்தான். சில சமயம் அவனே ஆர்வத்தோடு பஸ் ஒட்டிச் செல்வதும் உண்டு என்று ஒருமுறை என்னிடம் சொல்லியிருந்தான். அப்படி அவன் பஸ் ஒட்டிக்கொண்டு எதிரில் வந்தால், ரோடில் நடந்து கொண்டிருக்கும் என்னைப் பார்க்க நேரிட்டால் பஸ் வேகத்தைக் குறைத்து, என்ன இப்படி எங்கே போறே? என்று கேட்கக் கூடும்; வீணாக அவனுக்கு ஏதாவது பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும் என்று என் மனம் எண்ணியது. பஸ் முதலாளி வீட்டு மாப்பிள்ளை ஆகி, அந்தஸ்தில் உயர்ந்து, பொருளாதார நிலையிலும் உடல் அளவிலும் பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ராமசாமி, பள்ளி நாள்களில் நண்பனாகப் பழகியிருந்த போதிலும், இப்போது அப்பாவித் தோற்றத்தில், சட்டை அணியாமல் துண்டை மேலே போர்த்திக் கொண்டு பட்டிக்காட்டான் மாதிரி நடந்து கொண்டிருக்கிற என்னை அடையாளம் கண்டு கொள்வான் என்று எண்ணுவதே தப்பு. அவன் அப்படி அடையாளம் காண நேர்ந்தால் கூட, பஸ்சின் வேகத்தைக் குறைத்தோ, அல்லது நிறுத்தியோ, என்னிடம் நலம் விசாரிப்பான் என எதிர்பார்ப்பது பெரிய தப்பு. இப்படி என் அறிவு பேசியது. இருப்பினும், தொலைவில் பஸ் வருவதைக் கண்டதால் நான் பாதை ஒரம் சென்று பெரிய மரத்தினடியில் பதுங்கி நின்று, பஸ் கடந்து சென்றதும் ரோடுக்கு வந்து நடையைத் தொடர்ந்தேன். இது தேவையில்லாத வேலை என்றாலும் பஸ் எதிரே வந்த ஒவ்வொரு முறையும் அவ்விதம் செய்து கொண்டிருந்தேன். நெடுநேரத்துக்கிடையே சிறிது அவல் எடுத்து வாயில் போட்டு