பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 51 ‘சக்தியில் இப்போது ஆள் தேவையில்லை. பொதுவாக இப்போது எந்தப் பத்திரிகையிலும் புதிதாக யாரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள். யுத்தகால நெருக்கடி பத்திரிகைகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டிருக்கு. இப்ப நீங்க சென்னைக்குப் போவதனாலே எவ்விதப் பயனுமிராது. திருநெல்வேலிக்குப் போய், அங்கிருந்தபடியே பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருப்பது தான் நல்லது என்று தி.ஜர கூறினார். ‘சக்தி' விற்பனைப் பிரிவில் நிர்வாகியாக இருந்த சுயநாராயணனையும் கண்டு பேசினேன். அவரும் எனது எழுத்தை வெகுவாகப் பாராட்டினார். நான் கடிதங்கள் எழுதுகிற நேர்த்தியைப் புகழ்ந்து எனக்கு மகிழ்ச்சி ஊட்டினார். சண்முகசுந்தரம் புத்தகம் வெளியீடு சம்பந்தமாக வை.கோவிந்தனிடம் பேசி முடித்த பிறகு, நாங்கள் மீண்டும் 'இந்திரா அலுவலகம் சேர்ந்தோம். நீலகண்டனிடம் சண்முகசுந்தரம் நிலைமையை விவரித்தார். தி.ஜ.ர. சொல்வது தான் சரி. நீங்க திருநெல்வேலிக்குத் திரும்பிப் போவது தான் நல்லது. அங்கே வீட்டிலே இருந்தபடி பத்திரிகைகளுக்கெல்லாம் எழுதி அனுப்புங்க” என்று நீலகண்டன் ஆலோசனை கூறினார். ‘நான் உங்க அண்ணனுக்குக் கடிதம் எழுதிவிட்டேன். நீங்களும் எழுதுங்க” என்று கோ.த.ச.என்னிடம் ஒரு கார்டும் பேனாவும் தந்தார். எழுதினேன். திருநெல்வேலிக்கு ரயிலில் வருவதற்கு தேவையான பணம் அனுப்பி உதவும்படி கேட்டுக்கொண்டேன். வீரவநல்லூர் சுந்தரம் என் மீது அன்பும் அனுதாபமும் காட்டினார். பிரியமாகப் பேசினார். அவர் நேமத்தான்பட்டியில் அம்மாவோடு வசித்தார். அவர் வீட்டுக்கு அருகிலேயே திருநெல்வேலியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் வசித்தார்கள். அவர்களுக்கும் சொந்த ஊர் வீரவநல்லூர் தான். வீதி.நடராசன், வீதி. சொக்கலிங்கம் என்று பேர். நேமத்தான்பட்டியில் பள்ளி ஆசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள். உங்களைத் தெரியும் என்று சொன்னார்கள். உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள். இன்று மாலை நீங்க என்னோடு நேமத்தான்பட்டிக்கு வாங்க. உங்கள் அண்ணனிடமிருந்து பணம் வருகிற வரை நீங்க எங்கேளாடு தங்கியிருக்கலாம். பணம் வந்ததும் திருநெல்வேலிக்குப் போங்க என்று சுந்தரம் என்னிடம் சொன்னார்.