பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 & நிலைபெற்ற நினைவுகள் திருச்சியில் மட்டக்காரத் தெருவில் இருந்தது 'கலாமோகினி' அலுவலகம் ஒரு சிறு அறை தான். அதை ஒட்டிய வீட்டில் வி.ரா. ராஜகோபாலன் குடும்பத்தோடு வசித்தார். நான் போனபோது இரவு ஆரம்பித்திருந்தது. அப்போது ராஜகோப்ாலன் அங்கு இல்லை. அவருடைய தம்பி விரா. சந்தானம் தான் இருந்தார். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டதும், மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் வரவேற்றார். பையை இங்கேயே வைத்துவிட்டு வாங்க, முதலில் ஒட்டலுக்குப் போய் காபி சாப்பிடுவோம் மற்றதெல்லாம் அப்புறம்தான் என்றார். அவர் என்னைப் போலவே ஒல்லியாய், ஒரு பையன் போன்ற தோற்றமே கொண்டிருந்தார். - ஒட்டல் வெகு அருகிலேயே இருந்தது. ‘கலாமோகினி' ஆபீசுக்கு வருகிறவர்களுக்கெல்லாம் இங்கே தான் காப்பி, சாப்பாடு என்று சந்தானம் கூறினார். அங்கு சிற்றுண்டியும் காப்பியும் சாப்பிட்டோம். - அறைக்கு வந்து Η Η Gl) விஷயங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். நான் எனது இதயஒலி கையெழுத்துப் பத்திரிகையின் ஆண்டு மலர் தயாரித்திருந்தேன், பலவகையான கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓரங்க நாடகங்கள். எல்லாம் நானே எழுதியவை. சந்தானம் அதைப் பார்த்து அதிசயித்தார். 'கையெழுத்துப் பத்திரிகைன்னாலும் பிரமாதமா இருக்கு. இதுவரை நான் கையெழுத்துப் பத்திரிகை எதையும் பார்த்ததில்லை. இப்பதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். கையெழுத்திலும் இப்படி பத்திரிகை உருவாக்க முடியும் என்பது வியப்பாகத்தான் இருக்கு” என்று புகழ்பாடினார். அப்போது வி.ரா.ரா.வந்து சேர்ந்தார். தம்பி சந்தானம் அவரிடம் என்னைப் பற்றிக் கூறினார். காப்பி சாப்பிட்டாச்சா? என்று அன்புடன் விசாரித்தார் ராஜகோபாலன். 'கலாமோகினி' எழுத்தாளர்களான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், வ.ரா., சிட்டி, க.நா.சு. மற்றும் பல எழுத்தாளர்கள் பற்றிப் பேசி மகிழ்ந்தோம். கலாமோகினியை மேலும் சிறப்பாகக் கொண்டு வருவது பற்றி அவர் விவரித்தார். வி.ரா.ராஜகோபாலன் லட்சிய வேகத்தோடு, மணிக்கொடி மாதிரி மறுமலர்ச்சி இலக்கிய இதழ் ஒன்று நடத்த வேண்டும் என்ற